👤 ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு சகோதரிகளுக்காக, இன்பங்களை 🍬 தியாகம் செய்பவன் பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை 💭 தியாகம் செய்பவன் காதலிக்கு 👰 பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன் மனைவி குழந்தைகளுக்காக 👪, தன் இளமையை அடகுவைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன் எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன் இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன் அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம், கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்மனைவியை
வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம்,
அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்; மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம் ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது. இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...
Saturday, 28 February 2015
Thursday, 26 February 2015
படங்களின் அளவை மாற்றியமைக்க இலவச மென்பொருள்
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் தனித்தனி
பார்மெட்டில் இருக்கும். அந்த போட்டோக்கள் அனைத்தும் ஒரே அளவாகவும் (SIZE)
இருக்காது. இவ்வாறு உள்ள போட்டோக்களின் அளவை மாற்றவும், பார்மெட்டை
மாற்றவும். நாம் எதாவது ஒரு போட்டோ எடிட்டிங் மென்பொருளின் உதவியை மட்டுமே
நாட வேண்டும். போட்டோக்களை எடிட் செய்ய வேண்டுமென்றால் அனைவரும் கூறுவது
போட்டோசாப் மென்பொருளை மட்டுமே.
ஒரு போட்டோவாக இருந்தால் எளிமையாக எடிட் செய்துவிட முடியும். ஆனால் அதிகமான
போட்டோக்கள் இருப்பின் அந்த போட்டோக்களை எடிட் செய்வது சற்று சிரமமான
விஜயம் ஆகும். அவ்வாறு அதிகமாக உள்ள படங்களின் அளவையும், பார்மெட்டையும்
ஒரே நேரத்தில் மாற்றியமைக்க உதவும் மென்பொருள்தான் AnyPic Image Resizer
ஆகும். இந்த மென்பொருளின் உதவியுடன் படத்தின் அளவையும், பார்மெட்டையும்
எளிமையாக மாற்றியமைக்க முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில்
நிறுவிக்கொள்ளவும். பின் AnyPic Image Resizer அப்ளிகேஷனை ஒப்பன்
செய்யவும். Add என்னும் சுட்டியை அழுத்தி படங்களை தேர்வு செய்து கொள்ளவும்.
பின் எந்த பைல் பார்மெட்டில் படங்கள் வேண்டும் என்பதை தேர்வு செய்து
கொண்டு, படத்தின் அளவை குறிப்பிடவும்.
எது மாதிரியான பார்மெட்டில் படம் வேண்டுமோ அதனை குறிப்பிட்டு கொள்ளவும்.
பின் கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில்
படமானது சேமிக்கப்பட்டுவிடும். ஆன்ராய்ட் மொபைல் சாதனத்துக்கு ஏற்ற
மாதிரியாகவும், ஈ-மெயிலுக்கு ஏற்றது போலவும். பேஸ்புக் மற்றும்
ஐபேட்,ஐபோன் சாதனங்களுக்கு ஏற்ற மாதிரியாகவும், படத்தினை மாற்றிக்கொள்ள
முடியும். BMP, JPG(JPEG), PNG, TGA, TIFF, PSD, GIF போன்ற பைல்
பார்மெட்களில் படத்தினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
வலைப்பக்கத்தினை பிடிஎப்(pdf) பார்மெட்களில் சேமிக்க
வலைப்பக்கங்கள் பொதுவாக HTML பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இதனை
நாம் பிடிஎப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள
முடியும். இதனை நாம் நெருப்புநரி மற்றும் குரோம் உலவிகளில் செய்ய முடியும்.
பிடிஎப் மற்றும் இமேஜ் பைல்களாக மாற்றுவதால் நாம் இதனை உலவிகளின் துணை
இல்லாமலே காண முடியும். இந்த நீட்சியில் மூலம் நாம்
வலைப்பக்கத்தில் உள்ள எழுத்து, படம் போன்றவற்றை இணைத்தோ இல்லையெனில்,
வெறும் எழுத்துக்களை மட்டுமோ தனியாக சேமித்துக்கொள்ள முடியும்.
நெருப்புநரி உலவிக்கான நீட்சி
குரோம் உலவிக்கான நீட்சி
இந்த நீட்சிகளை குறிப்பிட்ட உலவிகளில் நிறுவிக்கொள்ளவும். பின் உலவிகளை
மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீட்சிக்கான சுட்டி உங்கள் உலவியில்
இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எந்த வலைப்பக்கத்திற்கு
சென்றாலும், அந்த வலைப்பக்கத்தினை பிடிப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில்
சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
இந்த நீட்சியின் மூலம், நாம் இமேஜ் பைல்களை JPEG, PNG, GIF, BMP மற்றும்
பல்வேறு பைல் பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். பிடிஎப் பைல்களை A4,
A3, Legal, B10 மற்றும் பல்வேறு பைல்பார்மெட்களில் சேமித்துக்கொள்ள
முடியும். நெருப்புநரி உலவியில் நீட்சிக்கான ஐகான் தெரியவில்லையெனில் Ctrl +
/ கீகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் காணமுடியும். இல்லையெனில் View >
Toolbars > Add-on Bar வழியாகவும் இந்த நீட்க்காண ஐகானை காண முடியும்.
இதில் உள்ள குறைபாடு என்னவெனில் ஒருசில தமிழ்வலைப்பக்கங்களை மட்டுமே சரியாக
சேமிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அனைத்து வலைப்பக்கங்களையும் எளிமையாக
சேமிக்க முடியும்.
இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு இந்திய வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன்
மூலம் எளிதாக பெறுவது எப்படி பெறுவது என்று தெரிந்து கொள்வதற்காக முதலில்
கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது
மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும்.

உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில்
கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள
விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய
கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும். இனி நீங்கள் "online application"
என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம்
ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து
சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம்
அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை
வழங்கப்படும்
அல்லது
எண்ணம் போல் விதவிதமாக உங்களின் படங்களை மாற்ற
நம்மில் பலருக்கு தமது புகை படங்களை மாற்றியமைத்து அழகுபட காட்டுவது என்பது
அலாதி பிரியம் அவர்களுக்காகவே இந்த பதிவு படங்களை மாற்றி அழகுபடுத்த
வெகுவாக பயன்படுத்தும் மென்பொருள் அடோபின் போடோஷாப் ஆகும். இதன் மூலம் தமது
படங்களை மாற்றியமைக்கபோட்டோ ஷாப் பற்றிய அறிவு அவசியமாகும் .
ஆனால் எந்த விதமான மென்பொருட்களையும் பயன் படுத்தாமல் இணையவழியில் ஆன்லைன்
மூலம் ஓரிரு மௌஸ் (MOUSE) கிளிக்கில் தமது விருப்பங்களுக்கு ஏற்றார்
போல் தமது என்னங்களுக்கமைய படங்களை அழகுபடுத்த ஏராளமான இணையதளங்கள் இலவச
சேவையை வழங்குகின்றது அவைகளுள் பிரதானாமான் சில தளங்களையும் அதன்
சிறப்புக்களையும் பாப்போம்..

தளங்களின் இணைப்பையும் இதனுள் இணைத்துள்ளேன் பயன்படுத்தி பாருங்கள்
1. BeFunky
இத்தளத்தில் மிக உயர்தரத்திலான படங்களாக மிகசிறந்த ஓவியரின் கைவண்ணத்தில் உருவான படங்களை போல் தமது படங்களை மாற்றியமைக்கலாம்
இந்த தளத்தில் சிறந்த நகைச்சுவை தன்மை வாய்ந்த படங்களை உருவாக்கலாம் .
இந்த தளத்தில் சிறப்பு ஒரு படத்தினை அப்லோட் செய்யும் பொது படங்களின்
முகங்களை தன்னிச்சையாக இனங்கட்டு நாம் தேர்வு செய்த படத்துடன் மாற்றம்
செய்ய தயார் நிலையில் இருக்கும் .
4.PicArtia
மூன்று சிறிய படிமுறைகளில் இரண்டு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் தமது படங்களை மற்றம் செய்யலாம்
அதிகளவான மாதிரிகளைதன்னகத்தே கொண்டுள்ள தளம்
6.Loonapix
தம்மை பிரபலமாக காட்டக்கூடிய பல மாதிரிகளை கொண்டுள்ள தளம்
படங்களை அப்லோட் பண்ணிய அடுத்த கணம் தமக்கு தேவையான மாதிரிகளை தெரிவு செய்து படங்களை மாற்றம் செய்யலாம்
8.Dumpr
இதுவும் எராளமான மாதிரிகளை தன்னகத்தே கொண்டுள்ள தளம்
பிரபல சஞ்சிகை முகப்பு பக்கங்களில் தமது படங்களை இணைக்கலாம்
10.MagMyPic
முப்பதிற்கும் அதிகமான பிரபல சஞ்சிகைகளில் படங்களை இணைக்கலாம்.
Subscribe to:
Comments (Atom)