please visit this site www.aimindian.blogspot.in,sirakukale.blogspot.in

Thursday, 17 December 2015

உயர்திரு doctor A.P.J.அப்துல் காலம் அவர்களின் அணுசக்தி சாதனை மற்றும் அணு சக்தியில் இந்தியாவின் வல்லமை

 



 (இது இந்தியா-அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து விளக்கும் கட்டுரை. சில பாகங்களாக வெளி வரும்) 
நாள்: 1974ம் ஆண்டு மே 18ம் தேதி காலை 7 மணி...
இடம்: ராஜஸ்தானின்
 
http://tamil.goodreturns.in/img/2015/12/15-1450173229-29-1438154614-kalam34.jpg
                    ஜெய்சால்மீர் மாவட்டத்தின் ஒரு பாலைவனப் பகுதி. எல்லாம் முடிந்துவிட்டது.. பட்டனை தட்ட வேண்டியது தான் பாக்கி, ஆனால், 'அந்த இடத்திலிருந்து' வெளியேற வேண்டிய அணு விஞ்ஞானி வி.எஸ்.சேத்தியின் ஜீப் ஸ்டார்ட் ஆகவில்லை. விரைகின்றன ராணுவ வாகனங்கள்.. ஜீப்பையும் சேத்தியையும் வேக வேகமாக அங்கிருந்து வெளியேற்றுகின்றனர். இடம்: டெல்லி. காலை 8 மணி. பிரதமர் இந்திரா காந்தி தனது அலுவலகத்தில் மகா டென்சனுடன் தொலைபேசி அருகிலேயே காத்திருக்கிறார். இன்னும் 'தகவல்' வரவில்லையே என்ற கவலை ரேகைகள் அவர் நெற்றியில்.. மணி 8.05.. தொலைபேசி ஒலிக்கிறது.. அவசரமாய் எடுக்கிறார் இந்திரா. மறுமுனையில் அணு விஞ்ஞானி ராஜா ராமண்ணா, Madam, 'Buddha has finally smiled'. மகிழ்ச்சியில் இந்திரா கண்கலங்க, 'இந்தியா அணு குண்டு சோதனை' என்ற செய்தி உலகெங்கும் பரவுகிறது. அந்த நாளி்ல் புத்தர் சிரித்திருக்கலாம்.. ஆனால், உலகம் அதிர்ந்தது. இந்தியாவா..? அணு குண்டா..? நம்ப முடியாமல் உறைகின்றன நாடுகள். குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும். சீனப் போரில் ஏற்பட்ட தோல்வியின் வலியில் உருவானது தான் நமது முதல் அணு குண்டு. ஹோமி பாபாவின் முயற்சியால் இந்தியாவில் 1940களிலேயே அணு ஆராய்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஆனால், மர்மமான விமான விபத்தில் அவர் பலியாக, ஆராய்ச்சிப் பணிகளை பின் தங்கின. வந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். நமது அப்துல் கலாமின் குரு. மீண்டும் சூடு பிடித்தது ஆராய்ச்சி. அவரும் இடையிலேயே திடீரென மரணமடைய டாக்டர் ஹோமி சேத்னா-டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர் இணைந்து நடத்தியது தான் போக்ரானின் முதல் அணு குண்டு சோதனை. இந்த மொத்த புராஜெக்டும் மகா ரகசியமாக வைக்கப்பட்டது. மொத்தமே 75 விஞ்ஞானிகள்-பொறியாளர்களுக்கு மட்டுமே இந்த பரம ரகசியம் தெரியும். மத்திய அரசின் கேபினட் செக்ரடரிக்கே கூட தகவலை சொல்லவில்லை இந்திரா. அத்தனை ரகசியம் காத்தார் பிரதமர். சீனா 1964ல் அணு குண்டு சோதனையை நடத்தியிருந்த நிலையில் 1974ல் குண்டைப் போட்டது இந்தியா. அன்று முதல் ஆரம்பமாகின தடைகள்.. குறிப்பாக அணு உலைகளை கட்ட, அணு சக்தி தொழில்நுட்பம் தர, அணு உலைகளுக்கு எரிபொருளான யுரேனியத்தைத் தர இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்த பல நாடுகளும் 'ஜகா' வாங்கின. அந்த தொழில்நுட்பத் தடைகளால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். இன்று பெட்ரோலுக்கும் (ஐயோ.. மீண்டும் பெட்ரோலோ என ஓடாதீர்கள்..), எரிசக்திக்கும் நாடு நாடாய் ஓடிக் கொண்டிருக்கிறோமே.. இதற்கு முக்கியக் காரணம் அணு சக்தி தொடர்பான தடைகள் தான். அசுர வளர்ச்சியில் இந்தியா காலடி எடுத்து வைத்திருந்தாலும் அதை 'sustain' செய்ய, 2050ம் ஆண்டுக்குள் நமது மின்சார உற்பத்தியை இப்போது இருப்பதை மாதிரி மேலும் சில மடங்காக உயர்த்த வேண்டியது மிக அவசியம். நீர் மின்சாரம், நிலக்கரி என நம்மிடம் உள்ள இயற்கை வளத்தைக் கொண்டு அந்த இலக்கை எல்லாம் எட்டுவது இயலாத காரியம். மழையை நம்பி, அணைகளைக் கட்டி, புதிய அனல் மின் நிலையங்கள் கட்டி, நிலக்கரி தோண்டுவதை அதிகரித்து.. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்குள் 2050ம் ஆண்டு வந்துவிட்டு போயிருக்கும். நம்மிடம் உள்ள ஒரே அஸ்திரம் அணு சக்தி தான். ஆனால், அணு சக்தியை முழுமையாக பயன்படுத்த தேவையான தொழில்நுட்பம், எரிபொருள்களான யுரேனியம், புளூட்டோனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற இந்தியா மீதான தடைகள் பெரும் சிக்கலாக உள்ளன. 1974க்கு முன் வரை நமக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகள் அணு ஆராய்ச்சியி்ல் மிக உதவிகரமாக இருந்தன. ஆனால், அணு குண்டு சோதனைக்குப் பின் ஒவ்வொரு நாடாக கழன்று கொள்ள அவர்களை நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களும் பாதியிலேயே நின்று போயின. சோவியத் யூனியன் மட்டும் தான் நமக்கு துணை நின்றது. மிக ரகசியமாக ராஜஸ்தான் அணு மின் நிலையத்துக்குத் தேவையான 'ஹெவி வாட்டரை' வழங்கியது. இது அணுக்களை பிளக்கும்போது அவற்றின் வேகத்தை கட்டுப்படுத்த உதவும் திரவம். இது பத்திரிக்கைகளில் கசிய சோவியத் யூனியன் உலக கண்டனத்துக்கு ஆளானது. அதே போல பிரான்சும் ஓரளவுக்கு இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. தாராபூர் அணு மின் நிலையத்துக்கு அமெரிக்கா யுரேனியத்தை திடீரென நிறுத்த இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந் நிலையில் அதைத் தர பிரான்ஸ் முன் வந்தது. இதனால் தான் அமெரிக்காவை நம்பி நாம் மீண்டும் காலை விட வேண்டுமா என்ற கேள்விகளை இடதுசாரிகள் எழுப்புகின்றனர். 1968ம் ஆண்டு அணு ஆயுத பரவல் தடை சட்டம் என்ற ஒரு ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் கொண்டு வந்தன. அதன்படி அவர்களைத் தவிர யாரும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற ரூல் போடப்பட்டது. இதில் எல்லாம் கையெழுத்து போட முடியாது என இந்தியா மறுக்கவே.. மேலும் பல தடைகள் வந்தன, இதனால் அணு ஆராய்ச்சியிலும் மின் உற்பத்தியிலும் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இருந்தாலும் இன்று வரையிலும் இந்தியா அதில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்தியா கையெழுத்து போட்ட பின் நாங்கள் போடுகிறோம் என்று பாகிஸ்தானும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி வருவது குறிப்பிடத்தக்கது). இந் நிலையில் 1989ல் சோவியத் யூனியன் சிதைந்து போக இந்தியாவின் அணு சக்தி திட்டங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கல்பாக்கம் உள்பட சோவியத்தை நம்பி ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேங்கிப் போயின. பின்னர் ரஷ்யா கையை ஊன்றி எழுந்து, நமக்கு மீண்டும் உதவ முன் வருவதற்குள் 10, 15 ஆண்டுகள் கரைந்தோடிவிட்டன. இப்போது தான் ரஷ்ய உதவியோடு கல்பாக்கம் திட்டம் முழு வேகத்தைப் பிடித்துள்ளது. ஆனால், ரஷ்யாவை மட்டுமே நம்பி நாம் இனியும் காலம் தள்ள முடியாது. காரணம், அவர்களாலும் ஓரளவுக்கு மேல் உதவ முடியாது. காரணம், அவர்களையும் கட்டுப்படுத்தும் உலக ஒப்பந்தங்கள் தான். 1974ல் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தியவுடன் அமெரிக்காவின் முயற்சியால் உருவானது தான் Nuclear Suppliers Group. எந்த நாடும் இந்தியாவுக்கு யுரேனியம் தந்துவிடக் கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் இந்த குரூப். இதில் ரஷ்யாவும் அங்கம். நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள்களான யுரேனியம், தோரியம் ஆகியவற்றைப் பெற நாம் இந்த 'குரூப்' நாடுகளை சார்ந்து தான் இருக்க வேண்டிய நிலை. வெறும் 15 நாடுகளுடன் ஆரம்பித்த இந்க குரூப்பில் இப்போது 44 நாடுகள் உள்ளன. ஆக, இங்கேயும் நமக்கு 'ஆப்பு' வைத்தது அமெரிக்கா தானே.. இப்போது அவர்களுடன் கைகோர்க்க வேண்டுமா என்பது இடதுசாரிகளின் இன்னொரு கேள்வி. இத்தனை தடைகள் இருந்தாலும் கூட கிடைத்த யுரேனியத்தை 'ரீ-புராஸஸ்' செய்து அதிலிருந்து அணு குண்டு தயாரிப்பதற்கான புளுடோனியத்தை உருவாக்குவது, அணு பிளப்புக்கு (Nuclear fission) பதிலாக அணு இணைப்பைக் கொண்டு (Nuclear Fusion) டிரிடியம் (tritium) உள்ளிட்ட அணு ஆயுதங்களுக்குத் தேவையான கதிரியக்க தனிமங்களை பிரித்து எடுப்பது என இந்தியாவும் விடாமல் தனது முயற்சிகளை தொடர்ந்தது. மேலும் கனடா பாதியில் கழன்று கொண்டாலும் அவர்கள் கொடுத்துவிட்டுப் போன 'டிசைனை' மட்டுமே வைத்து ஒரு அணு உலையை வெற்றிகரமாக அமைத்தும் காட்டியது இந்தியா. அதே போல ஜெர்மனியிடமும் ரகசியமாகப் பேசி 95 கிலோ பெரிலியம் (beryllium) என்ற தனிமத்தை வாங்கியது. இது அணு குண்டுகளில் நியூட்ரானை வேகப்படுத்த உதவும் பொருள். இந்த beryllium அமெரிக்காவில் தயாரானது. இதை விற்றதற்காக ஜெர்மன் நிறுவனத்துக்கு அமெரிக்கா 800,000 டாலர் அபராதம் விதித்தது. அதே போல ருமேனியாவிலிருந்து ஹெவி வாட்டர், சுவீடனில் இருந்து flash x-ray (இது அணுப் பிளவின் வேகத்தை படம் பிடிக்க உதவும் கருவி) என அமெரிக்கா தலைமையிலான தடைகளை இந்தியா வேறு வழிகளில் உடைத்துக் கொண்டே வந்தது. ஆனால், இவையெல்லாம் இந்தியாவுக்கு நியாயப்படி நேரடியாக கிடைத்திருக்க வேண்டிய உதவிகள் தான். இதைப் பெற பல்வேறு வழிகளை இந்தியா பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் இந்தியாவுக்கு பெரும் கால நஷ்டம் ஏற்பட்டது. இந் நிலையில் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தர முடியாது என சீனியர் ஜார்ஜ் புஷ் மறுத்தார். இதை இந்தியா அணு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என குற்றம் சாட்டினார். இந்தியா அளவுக்கு மீறி நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய இந்திய பாதுகாப்பு நிபுணர்களும், அணு விஞ்ஞானிகளும் மீண்டும் ஒரு முறை அணு குண்டு சோதனை நடத்தினால் தான் நமது பலத்தை உண்மையாகவே புரிந்து கொள்வார்கள். இவர்களது தடைகளால் நாம் ஒன்றும் முடங்கிப் போய்விடவில்லை என்பதை உலக்குக்கு காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவிடம் எடுத்துக் கூற, அவரும் தலையை ஆட்டினார். ஆனால்.... 1996ம் ஆண்டு.. மார்ச் மாதத்தில் ஒரு நாள்.. மீண்டும் போக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனைகளுக்கான வேலைகளில் இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவு தீவிரமாக இருக்க.. மேலே பல நூறு கிமீ தூரத்தில் பறந்தபடி அதை அப்படியே 'லைவ்' ஆக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பின அமெரிக்க உளவு செயற்கைக் கோள்கள். அப்போது அதிபராக இருந்த பில் கிளின்டன் தொலைபேசியில் நரசிம்மராவை பிடித்தார்.. மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என ஆரம்பித்து கிளின்டன் கொடுத்த நிர்பந்ததால் அப்போதைக்கு அணு குண்டு சோதனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார் ராவ். நிறுத்திய பின்னராவது தடைகள் நீங்கினவா.. இல்லை. பொறுத்தது போதும் என 1998ம் ஆண்டு மே மாதம் வாஜ்பாய் கண் அசைக்க, டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான டீம் போக்ரானையும் உலகையும் மீண்டும் ஒரு முறை உலுக்கிப் போட்டது. இம்முறை அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களையே ஏமாற்றிக் காட்டினார் அப்துல் கலாம். அப்துல் கலாமுக்குள் இருந்த 'அணு விஞ்ஞானி' குண்டு வெடிப்பு தொடர்பான ஸ்கெட்சை போட்டு ராணுவ என்ஜினியர்களிடம் கொடுத்தார். கலாமுக்குள் இருந்த 'ராக்கெட்-சேட்டிலைட்' விஞ்ஞானி அமெரிக்க செயற்கைக் கோள்களி்ன் சுழற்சியை 'கால்குலேட்' செய்து கொண்டிருந்தார்....
           

            அப்துல் கலாம் தனது விஞ்ஞானிகள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அங்கு வருகிறார் இந்திய அணு சக்திக் கழகத்தி்ன் தலைவர் டாக்டர் ஆர். சிதம்பரம். 'கலோனல் பிருத்விராஜ்'... என சிதம்ரம் அழைக்க, கலாம் திரும்பிப் பார்க்கவி்ல்லை.. யாரையோ கூப்பிடுகிறார் என நினைத்து தனது 'ஸ்கெட்களில்' ஆழ்ந்திருக்கிறார். மீண்டும் 'கலோனல் பிருத்விராஜ்' என சிதம்பரம் அழைக்க, கலாம் சட்டென திரும்பி ''ஆமா.. அது நான் தான் இல்ல, சொல்லுங்க கலோனல் நட்ராஜ்'' என்கிறார் சிதம்பரத்திடம். அணு குண்டு சோதனையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து மறைக்கும் யுத்தி தொடங்கியது இந்த பெயர்கள் மாற்றத்தில் இருந்து தான். இந்த முழு சோதனையையும் மகா ரகசியமாக வைக்க திட்டமிட்ட கலாம்-சிதம்பரம்- இந்திய அணு ஆயுத பிரிவின் தலைவரான டாக்டர் கே.சந்தானம்- பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அனில் ககோட்கர் டீம் முதலில் தங்களுக்கு புதிய பெயர்களை சூட்டிக் கொண்டனர். அந்த வகையில் பிருத்வி ஏவுகணையின் பெயரை சேர்த்து கலாமுக்கு பிருத்விராஜ் என பெயர் சூட்டினார் சிதம்பரம். பதிலுக்கு சிதம்பரத்துக்கு நட்ராஜ் என பெயரிட்டார் கலாம். அதே போல சந்தானம், 'கலோனல் சீனிவாசன்' ஆனார். ககோட்கருக்கு மட்டும் ஜாலியாக 'மாமாஜி' என பெயர் சூட்டினர். பாலைவனப் பகுதியில் தாங்கள் நடத்தப் போகும் அணு குண்டு சோதனைக்கு 'சக்தி' என பெயர் சூட்டினர். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது உளவாளிகள் கொண்டும் தொடர்ந்து கண்காணித்து வரும் நாடுகள், தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் நாடுகளுக்கு இந்த 'கலோனல்கள்' போக்ரானில் ஏதோ ராணுவ பயிற்சி நடத்துகிறார்கள் என்று தான் தோன்றியிருக்க வேண்டும். கலாம்-ஆர்.சிதம்பரம்- ககோட்கர்- சந்தானம் ஆகியோர் போக்ரான் பக்கம் போய் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வெளியானால், சந்தேகப் பொறி கிளம்பிவிடும் என்பதால் தங்கள் ரகசிய திட்டத்தை பெயர் மாற்றத்தில் இருந்து ஆரம்பித்தது இந்த டீம். மேலும் இவர்களது உடைகளும் மாறின. ராணுவ கலோனல்களின் உடைகளை அணிந்து தான் அந்தப் பகுதியில் நடமாடினர். ஏப்ரல் 10ம் தேதி தான் இந்த டீமை அழைத்து குண்டைப் போடச் சொன்னார் பிரதமர் வாஜ்பாய். அவர்கள் கோரியது ஒரே மாத அவகாசம் தான். சட்டென களத்தில் குதித்த இவர்கள் 120 விஞ்ஞானிகள் கொண்ட குழுவை உருவாக்கினர். ராணுவத்தின் Corps of Engineers பிரிவில் இருந்து 1,000 வீரர்களை தேர்ந்தெடுத்தனர். விஞ்ஞானிகள்- பொறியாளர்கள் என அனைவருக்கும் ராணுவ உடைகள் தான். அடுத்ததாக கலாம் அமெரி்க்க உளவு செயற்கைக் கோள்களின் நடமாட்டத்தை (satellite hours) வைத்து ஒரு 'டைம் டேபிள்' போட்டார். இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை வேலை பார்க்கலாம்.. இந்த நேரத்தில் யாரும் வெளியில் தலை காட்டக் கூடாது.. இந்த நேரத்தில் தான் அணுக் கருவிகள் தாங்கிய ராணுவ வாகனம் புறப்பட வேண்டும்.. இந்த நிமிடத்தில் தான் அது போக்ரானுக்குள் நுழைய வேண்டும்.. அங்கு நடப்பது ராணுவ பயிற்சி மாதிரி தெரிய வேண்டும், இதனால் ஹெவி மெஷின் கன்கள், மார்ட்டர்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை ஒரு பக்கம் வெடித்து புகையை கிளப்பட்டும்.. என பல்வேறு உளவு-ராணுவ யுத்திகளை ஒருங்கிணைத்தார் கலாம். கலாமின் இந்த டைம் டேபிளின்படி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் பெரும்பாலும் மிஞ்சியது இரவு நேரம் தான். இதனால் இந்தியாவின் அணு குண்டு சோதனைக்கான பெரும்பாலான பணிகள் இரவில் தான் நடந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத தூக்கமில்லா இரவுகள்.. மே மாதத்து 107 டிகிரி பாலைவன வெயில், கடும் உழைப்பு.. மே 10ம் தேதி பிரதமர் வாஜ்பாய்க்கு தகவல் தந்தார் கலாம், 'நாங்க ரெடி'.. வாஜ்பாயும் நீங்கள் நினைக்கும் எந்த நேரத்திலும் சோதனையை நடத்தலாம் என சுதந்திர தர, மே 11ம் தேதி பிற்பகலில் ஜெய்சால்மீர் பாலைவனத்தின் நிலத்தின் மிக ஆழத்தில் பூமி அடுத்தடுத்து 3 முறை குலுங்கியது. உலகின் பல நாடுகளில் உள்ள சீஸ்மோகிராப் கருவிகள் இந்த சோதனையை உடனடியாக ரெக்கார்ட் செய்ய, உலக நாடுகள் முழுவதும் தெர்மோ நியூக்ளியார் ஷாக்...!. இந்தியா சோதனையிட்டது அணு இணைப்பு (fission) மூலம் வெடிக்கும் 'தெர்மோ-நியூக்ளியார்' பாம். இந்தியா மீது போடப்பட்ட 30 ஆண்டு கால அணு ஆராய்ச்சித் தடைகளையும் அந்த குண்டு முழுவதுமாய் சிதறடித்தது. உங்கள் தடைகளால் நாங்கள் முடங்கிப் போய்விடவில்லை என உலகத்திடம் கர்ஜித்தது அந்த குண்டு. அடுத்த 30 நிமிடத்தில் பிரதமர் திடீரென பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.. ''இனி நாமும் அணு ஆயுத நாடு தான், இதை மற்றவர்கள் ஏற்றாலும் சரி. இல்லாவிட்டாலும் சரி''. இந்த சோதனை மூலம் இந்தியா 3 முக்கிய தகவல்களை 'அணு' உலகுக்கு சொன்னது. 1. யுரேனியத்திலிருந்து புளுட்டோனியத்தை பிரித்தெடுப்பதில் தன்னிறைவை பெற்று விட்டோம். 2. இனி அணு இணைப்பு மூலமான ஹைட்ஜன் பாமும் எங்களுக்கு சாத்தியம் தான். 3. ஹெவி வாட்டரி்ல் இருந்து டிரிடியத்தை பிரித்தெடுக்கவும் எங்களுக்குத் தெரியும். (அணுக்கள் இணைப்பு மூலமாக செயல்படும் அணு குண்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது tritium. இது ஒரு isotope.. அதற்குள் ரொம்ப போக வேண்டாம்.. அப்புறம் Element, Mass, Nuclei, Neutron என நாம் 'சண்டை' போட வேண்டி வரும்) இந்த குண்டு, அணு ஆராய்ச்சி குறித்து இந்தியா மீதான பார்வையை மாற்றியது.. தடைகள் போட்டு என்ன சாதித்தோம்.. இந்தத் தடைகளால் என்ன பயன் ஏற்பட்டுவிட்டது? என விவாதத்தி்ல் இறங்கின நாடுகள்.. குறிப்பாக அமெரிக்கா! ஆனால், அந்த விவாதங்களாலும் இந்தியாவுக்கு பலன் கிடைக்கவில்லை. மேலும் தடைகளைத் தான் போட்டார்களே தவிர உருப்படியாய் ஏதும் நடக்கவில்லை. இந் நிலையில் தான் வந்தது செப்டம்பர் 11 தாக்குதல். உலக நாடுகள் குறித்த அமெரிக்காவின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிய தினம் அது. நம் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என அமெரிக்காவை சிந்திக்க வைத்த தினம். தீவிரவாதம் குறித்த அதன் பார்வை மாறிய தினம். அதுவரையில் தீவிரவாதம் என்றால், தாக்குதல் நடந்த நாட்டில் உள்ள தனது தூதரகம் மூலம் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிடுவதே அமெரிக்காவின் ஸ்டைல் ஆக இருந்தது. தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தியா, அது குறித்து கொடுத்த அபாயக் குரல் அதுவரை அமெரிக்காவின் காதுகளை எட்டியதே இல்லை. இந் நிலையில் நியூயார்க் தாக்குதல், அந் நாட்டின் 'strategic planners'-களை சில குறிப்பிட்ட நாடுகள் பக்கமாய் திருப்பியது. எதிர்கால உலகின் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிக்கப் போகும் நாடாக, இந்தியாவைப் பார்த்தது அமெரிக்கா. இந்தியாவை நாம் ஏன் இத்தனை காலம் புறக்கணித்தோம் என அமெரிக்காவை வருத்தத்திலும் ஆழ்த்தியது. அடுத்து வந்தது தான் 'சடசட' மாற்றங்கள். இந்தியாவுடன் கூட்டு ராணுவ பயிற்சிகள், இந்திய விமானப் படையுடன் கூட்டு பயிற்சி என நெருங்கி வந்தது அமெரிக்கா. இந்தியாவுக்கு எப்-16 ரக விமானங்களைத் தரவும் முன் வந்தது. இந்திய-அமெரிக்க உறவில் இப்படியோடு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்-அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் டால்போட் ஆகியோர் நடத்திய 'மாராதான்' பேச்சுவார்த்தைகள் தான். இருவரும் மாறி மாறி அமெரிக்கா, இந்தியாவுக்கு பயணித்து பல சுற்றுப் பேச்சு நடத்தினர். இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட சந்தேகங்களை (ஓரளவுக்காவது) போக்கிக் கொண்டதும் அந்த சந்தர்ப்பங்களில் தான். ஜஸ்வந்த் சிங்கை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கே வந்து காலை 'ஜாகிங்' செய்ய கூட்டிச் செல்லும் அளவுக்கு நெருக்கமானார் டால்போட். கிட்டத்தட்ட 9 முறை இருவரும் அதிகாரிகள் மட்டத்திலும் தனியாகவும் பேச்சு நடத்தி பல துறைகளிலும் இரு நாடுகளை பிரித்து 'சுவர்களை' படிப்படியாக இடித்தனர். இதற்கு அதிபர் கிளின்டன்- பிரதமர் வாஜ்பாயின் முழு ஆதரவும் கிடைக்கவே, நிஜமாகவே நல்லுறவு பிறந்தது. அணு சக்தி ஆராய்ச்சியில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்ற விஷயத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதும் அப்போது தான். Comprehensive test ban treaty (CTBT)-ல் (இனிமேல் அணு குண்டு சோதனை நடத்துவதில்லை என்ற ஒப்பந்தத்தில்) மட்டும் கையெழுத்து போடு்ங்கள், நாங்களும் உங்களை NPT-ல் (Nuclear Non-Proliferation Treaty- அணு ஆயுத பரவல் தடை சட்டம்) கையெழுத்து போடுமாறு இனியும் நிர்பந்திக்க மாட்டோம் என இறங்கி வந்தது அமெரிக்கா. NPT விஷயத்தில் அமெரிக்காவின் சிந்தனை மாற்றத்தின் மூலம் இந்தியா அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற அமெரிக்காவின் நிலை மாறியது. ஆனாலும், CTBTயில் கையெழுத்திட முடியாது என இந்தியா மறுத்துவிட்டது. எங்கள் நாடு எப்போதும் அநாவசியமான அணு குண்டு சோதனைகள் நடத்தியதில்லை. எனவே, அதில் கையெழுத்திட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது இந்தியா. அதே போல அணு ஆயுத பரவல் தடை சட்டம் (NPT) இந்தியாவுக்கு பொறுந்தவே பொறுந்தாது. நாங்கள் ஒரு பொறுப்பான தேசம் என்பதை எப்போதும் நிரூபித்து வந்திருக்கிறோம்.. யாருக்கும் எங்கள் தொழில்நுட்பத்தை விற்றதில்லை, எனவே எங்களை அதில் கையெழுத்திடச் சொல்வது சரியல்ல என விளக்கியது இந்தியா. இந்தியாவின் நியாயங்கள் அமெரிக்காவுக்கு புரிய ஆரம்பித்த நிலையில் ஆட்சி மாற்றம். வந்தார் மன்மோகன் சி்ங். அமெரிக்கா-மேலைநாடுகளின் 'மார்க்கெட் எகானமி' மாடல் தான் நம் நாட்டை வறுமையிலிருந்து மீட்க உதவும் என்பதில் தீராத நம்பிக்கை கொண்டவர் சிங். சோசலிஷ-கம்யூனிஸ பொருளாதார கொள்கைகளால் பயனில்லை என்பவர். 1990களில் அவர் ஆரம்பித்த economic restructuring எனப்படும் பொருளாதார சீ்ர்திருத்தங்களின் பலனைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது (கடந்த 4 மாத 'சோகக் கதையை' மறந்துவிட்டுப் பார்த்தால்). சந்திரசேகர் பிரதமராக இருந்தோது பெட்ரோலியம் (ஆஹா, பெட்ரோலா!!) வாங்க அன்னிய செலாவணி கூட இல்லாமல் ரிசர்வ் வங்கியின் தங்கத்தை சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்து அங்கு வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தான் நாம். ஆனால், இன்று நம்மிடம் 312.5 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு. இன்று நாம் பார்க்கும் தகவல் தொடர்பு புரட்சி, தகவல் தொழில்நுட்ப சாதனைகள், தனியார் பங்களிப்புடன் 8 லேன் நெடுஞ்சாலைகள்.. என எல்லாம் சாத்தியமானது இந்த புதிய பொருளாதாரக் கொள்கைகளால் தான். 'ரெட் டேப்' சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து நம்மை 'மீட்டு' (இடதுசாரிகள் 'மாட்டி' விட்டது என்பார்கள்) மார்க்கெட் பொருளாதாரம் பக்கமாய் திருப்பிவிட்டது மன்மோகன் சிங் தான். இதனால் இயல்பாகவே அமெரிக்காவுக்கு சிங் மீது அதீத மரியாதை உண்டு. தன் மீதான அமெரிக்காவின் இந்த நம்பிக்கையை அப்படியே நாட்டின் நலனுக்காக முழுமையாய் பயன்படுத்த நினைத்த மன்மோகன், அணு சக்தி விவகாரத்தில் கையை விட்டார்...



       இனியும் நாம் காலாகாலத்துக்கு தடைகளை சந்தித்துக் கொண்டு, அதனால் வளர்ச்சியை விட்டுவிடக் கூடாது என்ற முடிவுக்கு வந்த மன்மோகன் சி்ங் அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் சீரியஸ் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். இந்தியாவின் தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது. ஒரு 'நல்ல நாளில்' இந்தியா மீதான தடைகளை நீக்குவதாக அறிவித்தார் ஜார்ஜ் புஷ். (கூடவே பாகிஸ்தான் மீதான தடைகளும் நீங்கின). இந்த அறிவிப்புக்கான காரணமே, இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது தான். இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கியது தான் High Technology Cooperation Group (HTCG). இது அதி உயர் தொழில்நுட்பத்தை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வகை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மிக உயர் மட்டக் குழு. இந்தக் குழுவின் முக்கிய 'டிஸ்கசன் அஜெண்டாவே' அணு சக்தி தொழில்நுட்பம் தான். இந்த விஷயத்தில் தொய்வே கூடாது என முடிவெடுத்த பிரதமர், தனது 'Man Firday'வான (வலது கரம் என்பார்களே.. அது) திட்டக் குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவையே நேரடியாகக் களத்தில் இறக்கிவிட்டார். இந்தியா-அமெரிக்கா எரிசக்தி பேச்சுவார்த்தை (அணு சக்தி என்று படிக்கலாம்..) என்ற பெயரில் இரு நாடுகளும் 5 உயர் மட்டக் குழுக்களை உருவாக்கின. இந்த 5 குழுக்களையும் ஒருங்கிணைத்தார் மாண்டேக் சிங். இந்தக் குழுக்களில் அமெரிக்காவின் சார்பில் U.S. Department of Energy (DOE) பிரிவின் அதிகாரிகளும், அதில் பெரும்பாலானவர்கள் அணு சக்திப் பிரிவினர், இந்தியாவின் சார்பில் Nuclear Regulatory Commission (NRC) அதிகாரிகளும் பங்கேற்றனர். இவர்கள் பேசியது இந்தியாவின் அணு சக்தித் துறைக்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவலாம் என்பது தான். மாண்டேக் சிங்கின் பொருளாதார மூளை தனது டெக்னாலஜி வாதத் திறமையையும், இந்த குழு உறுப்பினர்கள் மூலமாக, சேர்த்துக் காட்ட பேச்சுவார்த்தைகளில் புலிப் பாய்ச்சல். அப்போது தான் இந்த பேச்சுவார்த்தைகள் குறித்த விவரங்கள் மெல்ல வெளியில் வர ஆரம்பி்க்க, இடதுசாரிகளுக்கு 'பி.பி' எகிறியது. என்னமோ நடக்குது என்று என அவர்கள் விழித்துக் கொள்வதற்குள் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்துக்கு, அதாவது அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு, என்ற அளவுக்கு கொண்டு வந்திருந்தார் மாண்டேக் சிங். ஈராக் பெட்ரோலிய (ஹை.. பெட்ரோல்!) ஊழலில் சிக்கி நட்வர் சிங் கழற்றிவிடப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சரான புதிது. பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் இந்த அணு சக்தி பேச்சுவார்த்தைகள் குறித்த முழு விவரத்தையும் உள் வாங்கியிருந்த முகர்ஜியும் பிரதமர் உத்தரவால் வேகம் காட்டினார். மாண்டேக் தலைமையிலான குழுவினர் தந்த யோசனைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை பிரணாப் முகர்ஜியும் சந்தித்து அணு ஒப்பந்தம் குறித்து இருவரும் ஒரு அவுட்-லைனை உருவாக்கினர். இந்த ஒப்பந்த ஷரத்துகள் குறித்து முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளுடன் பேச்சு நடத்தினார் பிரதமர் மன்மோகன். அப்போது வி்ஞ்ஞானிகள் சொன்ன யோசனைகள் மிக முக்கியமானவை. இந்த ஒப்பந்தத்தின்படி நமது அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணு சக்தி கழகத்தின் (IAEA-International atomic energy agency) கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், அதை கடுமையாய் எதிர்த்தனர் விஞ்ஞானிகள். இதனால் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தேக்கம் ஏற்பட, விஞ்ஞானிகளே ஒரு தீர்வையும் கூறினர். நமது அணு ஆராய்ச்சி மையங்களை சிவிலியன், மிலிட்டரி என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சிவிலியன்-அதாவது மி்ன் உற்பத்திக்கு பயன்படும் அணு நிலையங்களை மட்டும் IAEA பார்வையிட அனுமதி தரலாம். மிலிட்டரி- அதாவது அணு ஆயுத தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருட்களை தயாரிக்கும் அணு நிலையங்களில் இருந்து அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள் என்றனர். இது நல்ல யோசனையாகப் படவே அது குறித்து IAEAவுடன் பேச்சு நடத்துவது என்று முடிவெடுத்தது மத்திய அரசு. இது civil nuclear deal தான். இந்த ஒப்பந்தப்படி ராணுவ ஆராய்ச்சி தொடர்பான அணு உலைகளை பார்வையிட வேண்டிய அவசியமோ தேவையோ IAEAவுக்கு இல்லை. இதை இந்தியா வந்த IAEA டைரக்டர் ஜெனரல் முகம்மத் அல் பாரடாயிடம் பிரதமர் விளக்க, அவரும் ஒப்புக் கொண்டார். ஆனாலும் இது குறித்து மேலும் விளக்கமாக பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கூறிவிட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பு மிக 'இன்பார்மலாக' நடத்தப்பட்டது. காரணம், ''அதுக்குள்ள IAEA கூட பேசுற அளவுக்கு போயாச்சா, அமெரிக்கா கூட எல்லா டீலிங்கும் ஆயிருச்சா'' என இடதுசாரிகள் பிடித்துக் கொள்வார்களே.... இதனால் எல்லா வேலையையும் 'நல்லபடியாக' முடித்துவிட்டு அப்புறமாக இடதுசாரிகளிடம் வருவோம் என்ற கணக்கில் இந்த விஷயத்தை கையாண்டது மத்திய அரசு. ஆனால், முகம்மத் அல் பாரடாய் வந்துவிட்டுப் போனது இடதுசாரிகளுக்கு பி.பி.யோடு கூடவே 'நெஞ்சு வலியையும்' தந்துவிட்டது. இன்னொரு பக்கம் அமெரி்க்காவிடமும் இந்திய ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களில் எக்காரணம் கொண்டும் மூக்கை நுழைக்கக் கூடாது என எடுத்துச் சொல்ல, முதலில் யோசித்த அமெரிக்கா, பின்னர் தலையாட்டியது. இப்படி எல்லா அம்சங்களும் கூடி வரவே, ஒப்பந்தத்துக்கு இறுதி வடிவம் தரும் முடிவோடு 2005- ஜூலை மாதம் அமெரிக்கா கிளம்பினார் பிரதமர் மன்மோகன் சிங். புஷ்சுடன் பல மணி நேரப் பேச்சு.. உருவானது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம். ஏற்கனவே பிபி, நெஞ்சு வலியோடு தவித்த இடதுசாரிகளுக்கு கடும் டென்சன், காய்ச்சலே வந்துவிட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு அணு சக்தி தொடர்பான தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றைத் தர அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது.. அதாவது '123' சட்டத்தின்படி. இது என்னாது?. எந்த ஒரு நாட்டுடனும் அமெரிக்கா அணு ஒப்பந்தம் (Civil nuclear deal) செய்ய வேண்டுமானால், அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் 123வது பிரிவின் கீழ், ஒரு தனி ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது தான் '123 Agreement'. ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யும் முன் முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (காங்கிரஸ்) அதிபர் அனுமதி பெற வேண்டும். இந்தியா விஷயத்தில் அதையும் பெற்றுவிட்டார் புஷ். இதுவரை 25 நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது அமெரிக்கா. இதில் சீனாவும் அடக்கம். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்தியா அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம். ஆனால், அணு ஆயுதத்தையோ தொழில்நுட்பத்தை அடுத்த நாட்டுக்கு தரக் கூடாது. தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியையோ அல்லது ஆயுதத்துக்கான உதிரி பாகத்தையோ கூட தரக் கூடாது. இந்த ஒப்பந்தம் 40 ஆண்டுகள் அமலில் இருக்கும். பின்னர் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம், அதையடுத்து காலாவதியாகிவிடும். புது ஒப்பந்தம் தான் போட வேண்டும். இந்த ஒப்பந்தப்படி இந்திய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை, தொழில்நுட்பத்தை தங்கு தடையின்றி அமெரிக்கா வழங்கும். மேலும் இந்திய அணு உலைகளை சர்வதேச அணு சக்திக் கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் சொல்லும் பாதுகாப்பு ஏற்பாடுகளை (safeguards) அமல்படுத்த வேண்டும். இதற்காக IAEAவுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்கள் ஓ.கே. சொல்லிவிட்டால் போதும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிடலாம். (இங்கு தான் ராணுவ அணு ஆராய்ச்சி மையங்களை IAEA-வுக்கு திறந்துவிட முடியாது என இந்தியா கூறிவிட்டது) இடையில் இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால், சோதனை நடத்தப்பட்ட ஓராண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிடும். அமெரிக்க எரிபொருள் சப்ளை (யுரேனியம்-தோரியம்) நின்றுவிடும். ஆனால், அதற்கான நஷ்டஈட்டை அமெரிக்கா பணமாகத் தந்துவிடும். மேலும் Nuclear supply group-ல் உள்ள தனது நட்பு நாடுகளிடம் இருந்து இந்தியா எரிபொருளை தொடர்ந்து பெறலாம். அதற்கு தடையில்லை. அதே போல இந்தியா நினைத்தால், ஓராண்டு நோட்டீஸ் தந்துவிட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறலாம். எல்லாமே நல்லா தானே இருக்கு... அப்புறம் என்ன, எதற்காக இடதுசாரிகளுக்கு 'காய்ச்சல்' வந்தது? காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் சுட்டிக் காட்டுவது 'ஹைட் ஆக்ட்'.. இது என்ன என்று தெரிந்தால் நமக்கும் காய்ச்சல் வருகிறதோ இல்லையோ, அட்லீஸ்ட் கோபத்தில் காதில் புகையாவது வரும்...
             
           இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்ததுக்கு ஒரு பக்கம் தயாராகிக் கொண்டே இன்னொரு பக்கம் அமெரிக்கா கொண்டு வந்த சட்டத் திருத்தம் தான் ஹைட் ஆக்ட் (Hyde Act). Henry J. Hyde உருவாக்கிய இந்த சட்டம் ஒப்பந்தத்தில் திணிக்கப்பட்டால் (திணிக்கப்பட்டாகிவிட்டது என்கின்றனர் இடதுசாரிகள்), இதன் 109வது பிரிவு, அணு ஆயுத பரவலை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவையும் தேவையில்லாமல் இழத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்று: அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதாக வைத்துக் கொள்வோம். ஈரான் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்துவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் நாமும் ஒரு 'பார்ட்டி' ஆகி விடுவோம. அதாவது, இந்தியாவின் ஒப்புதலோடு நடத்தப்பட்ட தாக்குதல் தான் இது என அமெரிக்கா சொல்லலாம். அமெரிக்காவுக்கு அவ்வளவு இடம் தருகிறது இந்த சட்டம். ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது, அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. இதை விளக்க மீண்டும் ஈரானையே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். எங்கள் போர் விமானங்களுடன் இந்திய விமானங்களும் வந்து குண்டு போட வேண்டும் என அமெரிக்கா சொன்னால், அதை நாம் கேட்க வேண்டும். அதெல்லாம் முடியாது என்று நாம் சொன்னால், இந்தியா ஒப்பந்தத்தை மீறுகிறது.. என அமெரிக்கா வம்பிழுக்க முடியும். மேலும் Proliferation Security Initiative (PSI) என்று ஒரு விஷயம் உண்டு. இதன்படி ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு தடை செய்யப்பட்ட ஆயுதத்தைத் தருவதாகத் தெரிந்தால் அதை வழியிலேயே தடுத்து நிறுத்தலாம்.. அழிக்கலாம். பாகிஸ்தானுக்கு வட கொரியா கப்பல் மூலம் அணு ஆயுதத்தை அனுப்புவதாக வைத்துக் கொள்வோம். அதி்ல் PSI ஒப்பந்த நாடுகள் இடைமறித்து பறிக்கலாம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இன்னும் கையொப்பமிடவில்லை. ஆனால், அமெரிக்காவின் ஹைட் ஆக்ட் நம்மையும் PSIக்குள் இழுத்து விட்டுவிடும். அப்புறம் Wassenaar Arrangement என்று இன்னொரு ஆயுத (அணு ஆயுதம் அல்லாத) ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம். இதிலும் நாம் இதுவரை கையெழுத்துடவி்ல்லை. ஆனால், இதிலும் நம்மை நாம் கேட்காமலேயே நுழைத்து விடுகிறது ஹைட் ஆக்ட். இது போக Australia Group. இது ரசாயன-உயிரியல் ஆயுத உற்பத்தி-பரவலை தடுக்கும் ஒரு ஒப்பந்தம். இதிலும் நாம் சேரவில்லை. ஆனால், இங்கேயும் போய் நம்மை மாட்டி விடுகிறது ஹைட் ஆக்ட். இதன் மூலம் சர்வதேச விவகாரங்களில் நமக்கென்று உள்ள தனித்தன்மை, சுதந்திரம், உரிமையில் அமெரிக்கா முழு அளவில் தலையிடுவதற்கு வழி செய்து தருகிறது ஹைட ஆக்ட். இதெல்லாம் அணு ஒப்பந்தம் தொடர்பாக நம்மிடம் முதலில் பேசியபோது அமெரிக்கா சொல்லாத விஷயங்கள்.. மேலும் இந்த ஆக்ட் சொல்வது எல்லாமே IAEAவின் ரூல்ஸ்களிலும் அடங்காத விஷயங்கள். முழுக்க முழுக்க அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள். இதைத் தான் இடதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இப்படி நம்மிடம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அமெரிக்கா இருக்கிறதே.. இவர்களை நம்பியா ஒப்பந்தம் செய்யப் போகிறீர்கள் என கோபத்துடன் கேட்கின்றனர் காம்ரேடுகள். மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்ததில் கையெழுத்து போடும் முன் நமது அணு உலைகள் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து IAEAவுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். IAEAவுடன் என்ன பேசப் போகிறீர்கள். அதன் விவரங்கள் என்ன என்று இடதுசாரிகள் கேட்கின்றனர். ஆனால், அது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான 'பரம ரகசியம்'.. இதனால் அதைப் பற்றியெல்லாம் வெளியில் தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்டார் பிரதமர். ஆனால், IAEA கூறும் பாதுகாப்பு யோசனைகளை இந்தியா ஏற்றால், பயன்படுத்தப்பட்ட யுரேனியத்தில் இருந்து அணு ஆயுதத்துக்குத் தேவையான புளுட்டோனியம் தயாரிக்க ஒரு தனி பிரிவை (dedicated facility) இந்தியா உருவாக்க வேண்டும். அதை IAEA ஆய்வாளர்கள் பார்வையிடவும் நாம் அனுமதித்தாக வேண்டும். இதன்மூலம் நமது அணு ஆயுதங்கள் குறித்த தகவல் வெளியில் போகலாம். அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்ற பெயரில் நமது அணு ஆராய்ச்சிகள் தொடர்பான சுதந்திரத்தை IAEAவிடம் இழக்கப் போகிறீர்களா.. என்று கேட்கின்றனர் இடதுசாரிகள். மேலும் ஒப்பந்தம் என்று வந்த பிறகு இந்தியாவுக்கு அணு தொழில்நுட்பம், எரிபொருள் ஆகியவற்றை அமெரிக்கா வழங்குவது தொடர்பான எல்லா விவரங்களும் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் கீழ் தானே வர வேண்டும். ஆனால், அவை எல்லாம் அமெரிக்க சட்டங்களின் கீழ் வரப் போகின்றன. இதுவும் இடதுசாரிகளை எரிச்சல்படுத்தியுள்ள இன்னொரு அம்சம். ஆனால், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் மத்திய அரசு ஏன் ஒப்பந்ததுக்கு தயாராக உள்ளது? என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு அவர்கள் சொல்லும் பதில். இடதுசாரிகள் சொல்வதைப் போல ஹைட் ஆக்ட் நம்மை கட்டுப்படுத்தவே கட்டுப்படுத்தாது. அது அமெரிக்காவின் Domestc Law. அது அவர்களைத் தான் கட்டுப்படுத்தும், நம்மை அல்ல. மேலும் இந்திய-அமெரிக்க ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட் இருக்கவே இருக்காது. இதனால் இந்த ஆக்ட் குறித்து நம்மிடம் அமெரிக்கா பேசவும் இல்லை, நாம் ஹைட் ஆக்டை ஏற்கப் போவதும் இல்லை. நாம் ஏற்காத ஒன்றை அமெரிக்கா நிச்சயம் நம் மீது திணிக்கவே முடியாது. ஒப்பந்தத்தில் இருக்கவே போகாத ஒரு சட்டத்தை சொல்லி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ் என்று இடதுசாரிகள் மிரட்டுவது செய்யும் அவர்களது சுயநலத்துக்காகத் தான் என்கிறது மத்திய அரசு. ஆனால், ஒப்பந்ததத்தில் ஹைட் ஆக்ட்டை தவிர்க்க முடியாது. அதை அமெரிக்கா நிச்சயமாக இந்தியா மீது திணிக்த்தான் போகிறது என்கின்றனர் இடதுசாரிகள். இத்தனை விவகாரங்கள் இருந்தாலும் இதை அணு விஞ்ஞானிகளும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களும் ஆதரிப்பது ஏன்?.. காரணம் இந்த ஒப்பந்தம் நமக்கு அளிக்கப் போகும் பலன்கள் அப்படி..
                      
                     இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து. (இந்தியாவில் உள்ள 22 அணு ஆராய்ச்சி மையங்களில் 14 மட்டுமே IAEA கண்காணிப்புக்கு விடப்படும்.. மிச்சமெல்லமாம் ராணுவ உலைகள். அங்கே அவர்களுக்கு வேலையே இல்லை, உள்ளே அனுமதியும் இல்லை என்கின்றனர்.) Hyde Act-டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள். நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது. நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை. நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை. யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான். இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம். மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது. தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம். ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம். மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும். அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile). சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது. இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன. பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம். நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்). அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான். அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள். அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது. கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது. இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான். ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை. அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர். அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள். ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது... இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன. ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர். இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்... இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்... அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!

ஏ.கே.கான்.

Friday, 24 July 2015

யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்... இந்தியாவுக்குப் பக்கத்தில் ஒரு திரில் தீவு......

யாராச்சும் வந்தீங்க, கொண்டே புடுவோம்... இந்தியாவுக்குப் பக்கத்தில் ஒரு திரில் தீவு.......

                           வடக்கு சென்டினல் தீவு

                  உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். 
                உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின் மூச்சுக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இரும்புக் கோட்டையாக இருக்கிறது இந்தத் தீவு. அதுதான் வடக்கு சென்டினல் தீவு.
              
                 இந்தத் தீவுக்குள் யாரேனும் நுழைய முயன்றால் ஒன்று உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டும் அல்லது உயிரை விட வேண்டும். வெளி உலகின் தொடர்பு சுத்தமாக இல்லாமல் இந்த வித்தியாசமான தீவு இந்த உலகத்தில் இருந்து வருகிறது.
                இந்தியாவுக்குச் சொந்தமான தீவு இது. அந்தமான் - நிக்கோபார் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட பகுதி. மியான்மருக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே வங்கக் கடலில் உள்ளது இந்த சின்னத் தீவு.

மர்மத் தீவு

               இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், இவர்களது வாழ்க்கை முறை என்ன என்பது குறித்து யாருக்குமே தெரியாது. இவர்களைப் பற்றிய எந்த ஆவணமும் யாரிடமும் இல்லை. பெரும் மர்மமான முறையில் இந்தத் தீவு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கடைசிக் கற்கால மனிதர்கள் 

            இந்தத் தீவில் வசிப்பவர்கள், கடைசிக் கற்காலத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஆவர். இவர்களை சென்டினலிஸ் என்று அழைக்கிறார்கள். இவர்கள் பேசும் பாஷை, இவர்களது வாழ்க்கை முறை என எதுவுமே யாருக்கும் தெரியாது.

60,000 ஆண்டுகளாக

             இந்தத் தீவில் மனிதர்கள் கடந்த 60,000 வருடங்களாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அடர்ந்த வனங்கள் நிறைந்த தீவாகும் இது. இங்கு வேட்டைதான் முக்கியத் தொழிலாக இருக்கும் என்று தெரிகிறது.

நாகரீகத்தின் காலடி படாத இடம் 

              பூமியில் நவீன நாகரீகத்தின் காலடி படாத ஒரே இடம் இதுதான் என்று கூறுகிறார்கள். வெளியுலகவாசிகளை இங்குள்ள மக்கள் தீவில் காலடி எடுத்து வைக்க அனுமதித்ததில்லை. யாரேனும் வந்தால் இவர்களின் ஈட்டி, வில் அம்புக்கு இரையாக வேண்டியதுதான்.

சிறையிலிருந்து தப்பி இங்கு போய் இறந்த கைதி 

             கடந்த 1896ம் ஆண்டு வெள்ளையர் அரசால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதி, அங்கிருந்து தப்பி இந்தத் தீவுக்குப் போயுள்ளார். ஆனால் அவரது கெட்ட நேரம் இந்தத் தீவு வாசிகளிடம் சிக்கி உயிரிழந்தார். அடுத்த நாள் இவரது உடல் அம்புகள் தாக்கியும், கழுத்து அறுபட்டும் பிணமாகக் கிடந்தது.

தப்பிப் பிழைத்த கப்பல் 

              1981ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி பிரிம்ரோஸ் என்ற கப்பல் இந்தத் தீவை ஒட்டியுள்ள பவளப் பாறையில் கரை தட்டி நின்று விட்டது. கப்பலில் நிறைய மாலுமிகள் ஊழியர்கள் இருந்தனர். கப்பலைப் பார்த்த தீவுவாசிகள் வில் அம்புடன் படை திரட்டி கப்பலைத் தாக்க கிளம்பி வந்தனர். கடற்கரையில் இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கேப்டன், உதவி கோரி ரேடியோ மூலம் தகவல் அனுப்பியும் கிடைக்கவில்லை. நல்லவேளையாக அப்போது வீசிய பெரும் அலையில் கப்பல் தானாகவே நகரத் தொடங்கியது. இதனால் அனைவரும் உயிர் பிழைத்தனர்.

யாரும் போகத் தடை 

             இந்தத் தீவு மக்கள் மிகவும் உணர்ச்சிகரமாக இருப்பதாலும், வெளியுலக நாகரீகம் தங்களை அண்ட விடாமல் கவனமாக இருப்பதாலும் இவர்களை தொல்லை தராமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டு விட இந்திய அரசு முடிவு செய்தது. அந்தமான் நிர்வாகமும் அதே முடிவுக்கு வந்தது. இதனால் இந்தத் தீவுக்கு செல்வது சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மீறிப் போனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

தீவு மக்களைக் காப்பாற்ற வேண்டும் 

              இதற்கிடையே, இந்தத் தீவில் வசிக்கும் மக்களையும், அவர்களது வாழ்வாதாரம், வாழ்க்கை முறைக்கு மதிப்பு கொடுக்கும் அதே வேளையில் அவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று சர்வைவல் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனம் வலியுறுத்தி வருகிறது.

நோய் வந்தால் அவ்வளவுதான் 

              இவர்களுக்கு தொற்று நோய் ஏதாவது பரவி விட்டால் அவ்வளவுதான் மொத்தமாக அழிந்து போய் விடும் அபாயம் உள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில், வெளியுலக மக்களை விட இவர்கள் மிகவும் ஆரோக்கியமாக, நிம்மதியாக, சந்தோஷமாக இருப்பதாக கூறப்படுகிறது.

சுனாமிக்கே தப்பியவர்கள் 

            கடந்த 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமித் தாக்குதலுக்குப் பின்னர் சென்டினல் தீவு மக்களின் கதியை அறிய இந்திய அரசு ஹெலிகாப்டர் ஒன்றை அனுப்பியது. அப்போது இந்தத் தீவு மட்டும் பத்திரமாக, பாதிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது. அருகில் உள்ள பல தீவுகள், அந்தமான் தீவு ஆகியவை பாதி்ப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தீவும், அதில் உள்ள மக்களும் தப்பினர்.

கற்களை வீசித் தாக்கினர் 

              இந்திய ஹெலிகாப்டர் தீவை வட்டமடித்து ஆய்வு மேற்கொண்டபோது கீழே இருந்து பழங்குடி மக்கள் கற்களை வீசியும், அம்புகளை எய்தும் இந்திய ஹெலிகாப்டருக்கு எதிர்ப்புகளைக் காட்டினர்.

2 மீனவர்கள் பலி 

              கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இப்பகுதிக்கு வந்த 2 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தீவு மக்களிடம் சிக்கி ஈட்டியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்க இந்தியக் கடலோரக் காவல் படை முயன்றது. ஆனால் வில் அம்புத் தாக்குதல் பலமாக இருந்ததால் இந்தியப் படையினரால் கரையைக் கூட நெருங்க முடியவில்லை.

ஏன் இவ்வளவு எதிர்ப்பு 

               இந்தத் தீவு மக்கள் ஏன் இவ்வளவு தீவிரமாக வெளியுலக மக்களை எதிர்க்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தத் தீவு இதுவரை யாரிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கவில்லை என்பது முக்கியமான ஒன்று. இங்குள்ள மக்கள் வசம்தான் இந்தத் தீவு இதுவரை இருந்து வந்துள்ளது. எனவே வெளியுலக தாக்கங்கள் இந்த மக்களிடம் சுத்தமாக இல்லை.

கலாச்சாரத்தைக் காக்க 

            இதன் காரணமாக இந்தத் தீவுக்கு யாரேனும் வந்தால் அவர்களை எதிரியாக மட்டுமே இங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள். எனவேதான் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள், கொல்கிறார்கள். மேலும் வெளியுலக மக்களால் தங்களது கலாச்சாரம், இனம் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலும், அதைக் காக்கும் வகையிலுமே இவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கிறார்கள்.

எத்தனை பேர் உள்ளனர் 

              இந்தத் தீவில் எத்தனை பேர் உள்ளனர் என்பது சரியாகத் தெரியவில்லை. 1930களில் 30 பேர் வரை இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 400 பேர் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

நாகரீகம் அண்டாத வரை நல்லதுதான் 

              வெளியுலக நாகரீகம் இந்தத் தீவை தீண்டாமல் இருப்பதால்தான் இந்த மக்கள் இவ்வளவு காலமாக இங்கு தாக்குப் பிடித்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. இதுவே தொடரட்டும் என்று இந்திய அரசும் விட்டு விட்டது. இருப்பினும் இந்த பூர்வகுடி மக்கள் இனம் காப்பாற்றப்பட வேண்டும், கற்கால மனிதர்களின் கடைசி சந்ததியான இந்த மக்கள் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறைக் குரலும் கேட்டபடியே உள்ளது.

Saturday, 20 June 2015

இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்

இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள் 

 இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள் என்னதான் மனிதன் அறிவுள்ளவனாகவும், திறமையும், பலமும் கொண்டிருந்தாலும் இயற்கையை எப்போதுமே வெல்ல முடியாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. என்னதான் பிரமிடுகளும், தாஜ்மஹால்களும் மனிதனால் கட்டப்பட்டாலும் இயற்கை நிகழ்த்தும் அதிசயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. அப்படித்தான் இந்தியாவில் இயற்கை அன்னை தன அதிசயங்களை நிகழ்த்தும் இடங்கள் சில இருக்கின்றன. வாருங்கள் அவை என்னென்ன என தெரிந்து கொள்வோம்.

 ரான் ஆப் கட்சில் நிகழும் சிர் பட்டி : 

இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள் குஜராத் மாநிலத்தில் தார் பாலைவனத்தை ஒட்டி இருக்கும் ரன் ஆப் கட்ச் மனிதர்கள் வசிக்கும் தன்மையற்ற ஒரு உப்புப் பாலைவனமாகும். இந்த இடத்தில் ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும் இந்தியாவை படையெடுத்து வருகையில் அலெசாண்டரின் படைகள் அந்த ஏரியை கடந்து இந்தியாவினுள் பிரவேசித்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் வெப்பம் அதிகரித்த காரணத்தினால் முழுவதும் வற்றிபோய் உப்பு படிமானங்கள் மட்டுமே இன்று எஞ்சி இருக்கின்றன. ஆர்டிக் பனிப்பிரதேசங்களில் நிகழ்வது போன்ற ஒளி மாயாஜாலம் இங்கும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. இதைதான் சிர் பட்டி அதாவது பேய் ஒளி என மக்கள் விழிக்கின்றனர். பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேலே இது நடைபெறுகிறதாம். அமானுஷ்ய விஷயங்களை புகைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நிச்சயம் இங்கே வரவேண்டும்.

சிரபுஞ்சி: 

இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்  இந்தியாவின் தென் கிழக்கு மாநிலமான சிரபுஞ்சி உலகத்திலேயே அதிகம் மழை பொழியும் இடமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு இங்கு மட்டும் 425 செண்டி மீட்டர் மழைப்பொழிவு இருக்கிறது. உலகின் மற்ற பசுமையான இடங்களைக்காட்டிலும் இது 100% அதிகமாகும். எப்போதும் ஒரு விதமான சொதசொதப்புடனே காணப்படும் இந்த இடத்திற்கு முடிந்தால் ஒருமுறை சென்று பாருங்கள். ஏனென்றால் இது மாதிரி ஒரு இடம் உலகத்தில் வேறெங்குமே இல்லை.

 காந்த மலைகள், லடாக்: 

 இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள் லாடாகில் இருக்கும் மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காந்த மலைகள். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இங்கு அளவுக்கு அதிகமான அறிவியலாளர்களால் இன்றும் விளக்க முடியாத அளவு அதீத புவியிர்ப்பு ஷக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாகனங்களை இயக்கா விட்டாலும் 20 கி.மீ வேகத்தில் அவை நகர்கின்றன. அவைகளை நாம் பிடிகா விட்டாலும் கீழே விழுவதில்லை. மேலும் இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்துடனேயே பறக்கின்றன. லடாக்கிர்க்கு சுற்றுப்பயணம் செய்தால் இங்கும் தவறாமல் சென்று வாருங்கள்.  

சுந்தர வனக்காடுகள் : 

 இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்  யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த சுந்தரவனகாடுகள் மலைபூட்டும் அளவு தன்னுள் இயற்கையின் அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கின்றன. இங்குதான் மிகவும் அரிதாகி வரும் ராயல் வங்கப்புலிகள் அதிகமாக வாழ்கின்றன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத தாவர மற்றும் விலங்கினங்கள் இங்கே தழைத்து வாழ்கின்றன. இந்த காடுகளுக்குள் ஓடும் ஆற்றில் படகு மூலம் காட்டின் எந்த மூலையையும் அடைய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

ஹிமாலய மலைகள்:

 இந்தியாவில் இருக்கும் ஐந்து இயற்கை அதிசயங்கள்  சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய இளமையான மலைகள் என்று அழைக்கப்படும் ஹிமாலய மலைத்தொடர்களில் தான் உலகின் உயரமான சிகரங்கள் இருக்கின்றன. உலகின் மூன்றாவது உயரமான சிகரமும் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமுமாக இருக்கும் கஞ்செஞ்சுங்கா இந்த ஹிமாலய மலைத்தொடர்களில் தான் அமைந்திருக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் தன் உலகின் பாதி மக்கள் தொகைக்கு உயிர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் சாரில் தான் இந்தியாவின் மூன்றில் ஒரு பாதி மாநிலங்கள் இருக்கின்றன. ஏராளமான சுற்றுலாதலங்கலும், ஆன்மீக ஸ்தலங்களும் இருக்கின்றன. வாழ்வில் ஒருமுறையாவது இந்த ஹிமாலய மலைகளின் பேராற்றலை தரிசிக்க வேண்டும்.

Thursday, 28 May 2015

படித்ததில் புடித்தது......

😄 எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கதை ... 😍😻
ஒரு நாள் ஒரு பெண்மணி கோல்ப் விளையாட சென்றாள். அவள் அடித்த பந்து கோல்ப் கிரவுண்டு பொந்துக்குள் விழந்து விட்டது.
அவள் அந்த பந்தை எடுக்க பொந்துக்குள் குனிந்தாள். அப்போது பந்தோடு ஒரு குட்டி தவளையும் 🐸 அதில் இருந்தது.
🐸 அந்த தவளை பெண்ணிடம் சொல்லியது "என்னை இந்த குழியில் இருந்து விடுவித்தால் உனக்கு 3⃣முன்று வரங்கள் தருகிறேன்" என்றது.
அந்த பெண் தவளைக்கு குழியில் விடுதலை தந்தாள்.
மேலே வந்த அந்த🐸 தவளை சொன்னது "அந்த வரத்தை தர ஒரு நிபந்தனை அதை சொல்ல மறந்து விட்டேன். உனக்கு நான் கொடுக்கும் வரம் உன் கணவருக்கும் பத்து மடங்கு அதிகமாக கிடைக்கும்" என்றது.
அந்த பெண் சொன்னாள் "அது பரவாயில்லை" என்றாள்.
👸 அந்த பெண் முதல் வரத்தை கொண்டு நான் இவ்வுலகில மிக அழகிய பெண்ணாக வேண்டும் என கேட்டாள். அந்த 🐸 தவளை அவளை எச்சரித்தது.
உன் கணவன் உன்னை விட அழகானவாக மாறி விடுவான் என்றது.
"அது பரவாயில்லை ஏன் எனில் அவருக்கு இணையான அழகு படைத்த என்னை மட்டுமே அவர் பார்ப்பார்" என அந்த பெண் சொன்னாள்.
ஆகவே முதல் வரம் கிடைத்து அந்த பெண் உலகில் அழகிய பெண்ணாணள். அவள் கணவனும் உலகில் அவளை விட ஆணாக மாறினான்.
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
💰 அந்த பெண் தனது இரண்டாவது வரமாக "உலகின் முதல் பணக்காரியாக மாற வேண்டும்" என கேட்டாள்.
அந்த தவளை சொன்னது, "உன் கணவனும் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனகிவிடுவான் என்றது".
அதுவும் பரவாயில்லை அவர் என்னுடையவர் என்னை பற்றி தெரியும்."
ஆகவே, இரண்டாவது வரத்தின் படி அவள் உலக முதல் பணக்காரியானள்.!
அவள் கணவன் அவளை விட பத்து மடங்கு பெரிய பணக்காரன் ஆனான்.
அந்த தவளை பெண்ணிடம் முன்றாவது வரத்தை கேள் என்றது.
அதற்கு அந்த பெண் "எனக்கு மிக மெல்லிய மாரடைப்பு வர வேண்டும் என கேட்டாள்."
💔
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
இந்த கதையின் நீதி "பெண்கள் மிக பெரிய புத்திசாலிகள் அவர்களோடு போட்டி போடுவது மடத்தனம்."
..
..
..
..
..
.
.
.
.
.
.
.
🚺 பெண்களுக்கு மட்டும் எச்சரிக்கை:- இது ஒரு நகைச்சுவை உங்களுக்கும் மட்டும். நல்ல எண்ணத்தோடு இந்த பதிவை இதோடு படிப்பதை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
..
..
...
..
..
..
...
...
..
...
..
..
...
..
..
..
..
..
🚹 ஆண்களுக்கு மட்டும் 📖: கண்டிப்பாக கிழே இறங்கி பாருங்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அந்த கணவனுக்கு அந்த பெண்ணை விட பத்து மடங்கு மிக குறைந்த மெல்லிய மாரடைப்பு மட்டும் வந்தது.
😋
. . .. . ..
..
..
..
..
..
..
..
..
இந்த கதையின் இன்னொரு நீதி.
பெண்ணுக்கு தன் எப்போதும் புத்திசாலி என்று நினைப்பு. அதன்படியே அவர்கள் நடந்து நமக்கு நல்லது செய்கிறார்கள்.🙉
குறிப்பு :- 👩 நீங்கள் பெண்ணாக இருந்து இதை இன்னமும் படிக்கிறிர்கள் எனில் பெண்கள் யார் சொல்லியும் கேட்பதில்லை என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
‪#‎குப்பனின்குசும்புகள்‬.
எல்லா ஆண்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து சிரியுங்கள் பெண்கள் எப்போதும் அதிக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் ஆண்களை சிரிப்பா சிரிக்க வைப்பார்கள்.

படித்ததில் புடித்தது......

Thursday, 16 April 2015

காதல் பற்றிய சிறப்பு தொகுப்பு!!!

காதலர்களின் காதல் உதயமாகும் பிப்ரவரி 14 ஆம் தேதியின் வரலாறு!!!

பிப்ரவரி 14 ஆம் தேதி, இந்த நாளுக்கு மேற்கொண்டு அறிமுகம் தேவையில்லை. காதலர்களுக்காகப் போராடிய வாலண்டைன் என்ற பாதிரியார் மறைந்த நாள் இது. காலத்தால் அழியாத காவியங்களைக் காதலர்களால் மட்டுமே படைக்க முடியும். அத்தகையவர்கள் காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.


இது காதல் தானா?


நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள்...

உங்கள் கிளாஸ்மேட், பேஃஸ்புக் நண்பர், பக்கத்து வீட்டு பையன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. ஆனால்! இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பீர்கள்?

கதை, கவிதை, திரைப்படம், ஓவியம், இன்டர்நெட் என்று எங்கு பார்த்தாலும் காதலைப் பற்றிய பேச்சு! இருந்தும் உங்கள் குழப்பத்தை தீர்க்க முடியவில்லையா? நோ பிராப்ளம்! கீழே உள்ள குறிப்புகள் நிச்சயம் அது காதலா அல்லது நட்பா என்று தெரிந்து கொள்ள உதவும்!

அந்த `ஸ்பெஷல் நபரை' நினைத்துக்கொண்டு படித்துப் பாருங்கள். இது காதல்தான் என்றால் :

முன்பைவிட மேக்கப்பில் அதிக நேரம் செலவாகும்.

உடைகள் வாங்கும் போது உங்கள் நினைவில் தோன்றுவது "இது `அவனுக்கு' பிடிக்குமா?" என்பது தான்!

பாடங்கள் படிக்கும் போது நினைவுக்கு வருவது `அவனோடு' என்ன பேசலாம் என்பது.

ஆசிரியர் பாடம் நடத்தும் போது காதில் விழுவது `அவன்' பேசியது மட்டுமே!

பர்ஃபியூம், சென்ட் என்று வாசனைப் பொருட்கள் வாங்குவதில் காசு கரைகிறது!

டெலிஃபோன் மணி அடித்தால் தாவிச் சென்று முதலில் எடுப்பது நீங்கள்!

`அவனை' நேரில் சந்தித்தது பத்தாமல் டெலிஃபோனிலும், இன்டர்நெட்டிலும் மணிக்கணக்காக அரட்டை தொடர்கிறது.

`அவனக்கு' விருப்பமான இசை, நடிகர்கள், (நடிகைகள் இந்த பட்டியலில் சேர முடியாது!) விளையாட்டில் திடீரென்று உங்களுக்கும் ஆர்வம் இருப்பதை கண்டுபிடிக்கிறீர்கள்!

நேத்து வரை நண்பிகளோடு வெளியே செல்ல அம்மாவிடம் சண்டைப் போட்டது போக, `அவன்' ஃபோன் செய்வார் என்ற காரணத்தால் அம்மாவே போகச் சொன்னாலும் வீட்டில் தங்கி விடுவது.

பீச், சினிமா, ஷாப்பிங் என்று எங்கு போனாலும் `அவன்' வந்திருக்கிறார் என்ற பிரமை ஏற்படுகிறது.

திருமணம், திருமணமான தோழிகள் திருமண வாழ்வு, எல்லாம் `போர்' என்று நினைத்த காலம் போய்விட்டது.

ஃபோன் செய்யும் போது உங்களை அறியாமலேயே விரல்கள் `அவன்' எண்ணை தட்டுகிறது.

(இரவு முழுதும் `அவன்' நினைவில் தூக்கமே வரவில்லை என்றாலும்) அம்மா எழுப்புவதற்கு முன்பே காலையில் சுறுசுறுப்பாக எழும்புவது.

என்ன? இப்போ புரியுதா....குழப்பம் தீர்ந்ததா....நீங்களே பாத்து ஏதோ நல்ல முடிவா எடுங்க...

இது காதல் தானா! 

தனிமை வாட்டுகிறதா........?


இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.

இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள்.

எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கபட்டிருக்கும் இவர்கள், இனி யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களுடன் இருந்து காயப்படுவதை விட தனியாக நிம்மதியுடன் இருப்பதே மேல் என்ற அளவிற்கு தீர்மானித்திருப்பார்கள்.

இந்த முடிவு நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒன்று. எப்போதும் நண்பர்களுடன் இருந்து பழகியவர்களுக்கு தனியாக இருப்பது என்பது கண்ணை‌‌க் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். ஒரே நாளில் வாழ்க்கையே வெறுத்தது போல தோன்றும். இந்த சிக்கலான சூழலில் இருந்து வெளியே வர அதிக மன வலிமையும் சில எளிமையான டிப்ஸும் தேவை... அந்த எளிமையான டிப்ஸ் இதோ...

தனிமையில் இனிமை - நமது அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தனிமை அதன் சுயரூபத்தை காட்டும். தனியாக இருப்பது ஒரு பெரிய இழப்பல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் வாழலாம்.

தனிமையை புரிந்துகொள்ளுங்கள் - தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், ந‌ம்முடைய வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடுபடலாம்.

தனிமையை புறக்கணியுங்கள் - உங்களை போல் தனிமையில் வாடும் வேறு ஒருவரை‌க் கண்டால் அவரிடம், சாதாரணமாக பேச்சு கொடுங்கள். ஒரு சிம்‌ப்பிளான அறிமுகத்திற்கு பின் நலம் விசாரியுங்கள். இப்படி செய்வதானால், உங்களின் புதிய நண்பரை தனிமையின் பிடியிலிருந்து விடு‌வி‌த்‌திருப்பீர்கள். கொஞ்சம் நேரத்திற்கு உங்களைவிட்டும் தனிமை விலகியிருக்கும்.

குடும்பம் கைகொடுக்கும் - உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செல‌விடு‌ங்கள். உங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என நீங்கள் எண்ணினாலும், உங்களுக்கு தேவையான அனைத்து சந்தோஷமும் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.

தனிமையை வெல்லுங்கள் - தனிமையை மறக்க முயற்சி செய்யுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்து உங்களை கவர்ந்த விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமையுங்கள்.

இவை அனைத்தையும் விட தனிமையை நொடி பொழுதில் களைய ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான முறை உடனடியாக ஒரு செல்ல‌ப் பிராணி வாங்குவதுதான்.

நாய், பூனை, பறவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து அன்பு மற்றும் சிறிது அக்கறையை மட்டும் எதிர்பார்க்கும் இவை என்றும் உங்களை மீண்டும் தனிமையில் விடாது என்பது உறுதி.

முத்தப் பொன்மொழிகள்!


முத்தத்தின் ஒலி பீரங்கி சத்தத்தை விட மென்மையானது. ஆனால் அதன்
எதிரொலி அதிக நாள் நீடிக்கிறது.

முத்தம் ரியல் எஸ்டேட் மாதிரி. அதில் லொகேஷன் ரொம்ப முக்கியம்.

மௌனத்தைக் கலைக்க சிறந்த வழி முத்தம்தான்.

ஆண்கள் தங்கள் கடைசி முத்தத்தை மறந்து நீண்ட காலம் ஆன பிறகும்
பெண்கள் தங்கள் முதல் முத்தத்தை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

ஆண்கள் நாலு லார்ஜ் உள்ளே இறங்கிய பிறகு தன்னை மறந்துவிடுவார்கள். பெண்கள் நான்கு முத்தங்களுக்குப் பிறகு எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்கள்.

முத்தம் காதலின் மொழி என்றால் அந்த மொழியில் நாம் பேச நிறைய இருக்கிறது.

முத்தம் உணவைப் போல : ஒரு வாய் சாப்பிட்டால் போதவே போதாது.

முத்தம் உப்பு நீரைக் குடிப்பது போல. குடிக்கக் குடிக்க தாகம் அதிகரிக்கிறது.

ஆண்கள் தங்கள் முதல் முத்தத்திற்கு பெண்களைக் கெஞ்சுகிறார்கள். பெண்கள் தங்கள் கடைசி முத்தத்திற்கு ஆண்களைக் கெஞ்சுகிறார்கள்.

முத்தத்தை உதட்டில் கொடுக்காமல் "ஃப்ளையிங் கிஸ்" கொடுப்பவர்கள் உலகமகா சோம்பேறி!

காதல்ன்னா என்ன? எப்படி காதலிக்கலாம்?


காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது பாஸ். காதல் என்பது...

காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் சொல்கிறார்.

ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும். காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு. காதலை ஒழிக்க வேண்டும். காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், காதலர்தினமும் நெருங்கி வரும் வேளையில் காதலைப்பற்றிய விரிவான விவாதம் தேவை என்று கருத வேண்டியுள்ளது.


முதலிலகாதலஎன்பதவெளிநாட்டுபபண்பாடஎன்றபார்க்வேண்டியுள்ளது. இப்படிபபேசுபவர்களதமிழ்நாட்டினஅரிச்சுவடியதெரியாதவர்களஎன்றதானசொல்வேண்டும். தமிழரவரலாற்றிலகாதலஒரமுக்கியமாபண்பாட்டுக்கூறு. தமிழஇலக்கியங்களிலகாதலைபபற்றிபபேசப்படாத, காதலைபபோற்றாஒரஇலக்கியத்தைககூபார்க்முடியாது. தமிழஇலக்கியங்களிலஅகநானூறஎன்இலக்கியமதமிழரினகாதலவாழ்க்கையைபபற்றி, காதலைபபற்றி விரிவாகபபேசுகின்றது.

தமிழஇலக்கியங்களிலஉள்ளதஅதனாலகாதலிக்வேண்டுமஎன்றபேவரவில்லை. இலக்கியங்களிலஇருந்தாலும், இல்லாவிட்டாலுமமனிதனாகபபிறந்ஒவ்வொருவனினஉணர்விலுமகாதலதோன்றியதீரும். காதலஎதிர்ப்பவர்களவேண்டுமானாலஅந்உணர்வுக்ககாதலஎன்பெயரவைக்காமலவேறபெயரைககூவைத்துககொள்ளலாம். அதற்கமேலகாதலஎன்உணர்வுக்கயாராலுமஎதிர்வினையாற்முடியாது.

இன்றபுத்தகங்கள், திரைப்படமமற்றுமஇணையதளத்திலகாதலகருத்துக்களவழிகளிலவெளிப்படுகின்றது. ஆனாலஉண்மையாகாதலஉள்ளுணர்வோடநாமவைத்தபழகும்போததானஅதஉணரமுடியும். சிலருக்ககாதலசெய்யுமபோது, ஆரம்காலத்தைத் தவிமற்நாட்களிலஎந்ஒரசுவாரஸ்யமாவிஷயமுமஇல்லாமல், ஃபோரஅடிப்பதபோன்றஉணர்வார்கள். சிலருக்கஅதனாலேயகாதலதோல்வி அடைந்துவிடும்.


எனவே அந்த மாதிரி காதல் இல்லாமல், எப்போதுமே காதலுடன் (ரொமான்ஸாக) இருக்க சில வழிகள்:

1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்பவரை மகிழ்விப்பதற்கு, அவர்களின் காதல் உணர்வுகளைத் தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் மனம் அவர் மீது அதிக கவனத்தை செலுத்தும். இவ்வாறு செலுத்தும் போது, அவர்களது ஒவ்வொரு செயலையும் ரசிக்கத் தோன்றும்.

2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர் என்பதை எப்படி வெளிபடுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிக்க வேண்டியது அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்க வேண்டும். நீங்கள் முன்னமே காதல் தோல்வி அடைந்தவரானால், அந்த தோல்வியைக் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு அனுதாபத்தை உண்டாக்கலாம். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை வைத்திருந்தீர்கள், காதலில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்பதை விளக்கும் போது, உங்கள் மீது காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது.

3. காதல் செய்யும் போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண்ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர் மீது காதல் கொண்டு, மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக்க - நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பாரா? முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச்சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன்றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும்படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும் படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.

4. காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொருளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல்லை. உண்மையில், சில நேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதிலும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப்படுத்த "நான் உன்னை காதலிக்கிறேன்", "நான் உனது பிரிவால் வாடுகிறேன்" என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். இல்லையெனில் அவர்களை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம்பற்ற வழிகளில் வெளிப்படுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கையாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!

5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப்படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்களோடு இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழு முயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொடர்ந்து பார்க்கும் போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

இவையெல்லாம் சில அனுபவங்கள் தான். காதல் அனுபவிக்க வேண்டியது. போற்றப்பட வேண்டியது. வளர்க்கப்பட வேண்டியது. ஜாதி ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர, மனிதநேயம் தளைக்க ஜாதி கடந்த காதல் திருமணங்கள் தேவை.

மவுனம் பேசாதீர்கள்!!!

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.

ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும்.

ஏனென்றால் மவுனமாக இருக்கும்போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.

மேலும் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும்.

முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.

வர வர காதல் கசக்குதையா......!

     இப்போதெலாம் காதல் திருமணம் என்பது ஃபாஷனாகி விட்டது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தோழமை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிகரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இருவீட்டாரின் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துடனும் நடக்கிறது.

இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையாது, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்லனை எதிர்த்து காதலி கையை பிடிக்கும் சுவாரஸ்யமே தனி தான்.

முன்பெல்லாம் காதல் வயப்பட்டதும் அதை காதலியிடம் தெரிவிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். இப்பது நிலைமை அதற்கு எதிர்மறையாக உள்ளது. காதலன் காதலியிடம் காதலை சொல்ல மொபைல், மெயில், பேஸ்புக், சாட்டிங் என தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கைகொடுக்கின்றன.

எதுவும் ஈசியாக கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பதை போல, ஒருவரின் வாழ்வில் " காதல்" என்னும் அத்தியாயம் இருந்தது என்பதை அவர் உணர்வதற்குள் அது காணாமல் போய்விடுகிறது. இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் பொருந்தும்

காதலி காதலுக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாள், இருவருக்கும் கை நிறைய சம்பளம், பெற்றோருக்கு சம்மதம், கல்யாண வயது முடியும் தருவாய் என பலவற்றையும் காரணம் காட்டி அன்பு காதலியை அவசர மனைவியாக மாற்றிவிடுகிறார்கள்.

இவ்வாறு கைபிடிக்கும் காதலர்கள் திருமண நாள் முதல் வேறு விதமான நிதர்சன உண்மைகளை சந்திக்க நேரிடுகிறது. காதலிக்கும் வரை அன்பாகவும் பாசமாகவும் பழகிய காதலி/காதலன், திருமணதிற்கு பின் காலை முதல் மாலை வரை கோபத்தின் உச்சியில் இருப்பதுபோல தோன்றும்.

இதுவே நாளடைவில் கருத்து வேறுபாடு, சண்டை, தவறாக புரிந்துகொள்ளுதல், ஈகோ, வெறுப்பு என படிப்படியாக அதிகமாகி கடைசியில் விவாகரத்து, நிரந்தரமான பிரிவு என்னும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுவிடும்.

காதலிக்கும்போது உருகி உருகி காதலித்த துணையின் முகத்தை பார்க்ககூட பிடிக்காமல் போய்விடும். இதனால் இவர்கள் மட்டுமின்றி இருவரின் குடும்பத்தினரும் பாதிக்கபடுவார்கள்.

விவாகரத்து தான் சரியான தீர்வு என்னும் அளவுக்கு காதல் கசிந்து விடாமல் பார்த்துகொள்வது காதல் திருமணம் புரிந்தவர்களின் தலையாய கடமை.

திருமணத்தின் முதல் நாளிலிருந்து வாழ்கையின் இறுதிநாள் வரை அன்பு, அக்கறை, பணிவு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து வாழ்தல் போன்ற நற்குணங்களை பின்பற்றினாலே "காதல் திருமண வாழ்க்கை" சொர்க்கமாகும்.

காதலுக்கு உயிரூட்டும் எளிய டிப்ஸ்!


காதலர் தினத்திற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஆண்கள் தங்கள் காதலியையும், பெண்கள் தங்கள் காதலனையும் கவர என்னென்ன செய்யலாம் என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள்.

காதலில் விழுந்த இளசுகளுக்கு இந்த யோசனை என்றால், நமக்கு எப்போது காதல் கதவை தட்டும் என எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த வருடமும் காதலர் தினத்தில் தனியே இருக்ககூடாது என்ற கவலை. இந்த வருடம் கண்டிப்பாக ஒரு துணையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு ஷாப்பிங் மால்கள், தீம் பார்க்குகள், தியேட்டர்கள், கோவில்கள், பீச், பார்க், தெரு‌க்க‌‌ள் போன்ற பல இடங்களில் இளசுகளின் கூட்டம் அலைமோதும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், காதலில் விழுந்தவனுக்கு தான் அதிலிருக்கும் கஷ்டங்கள் தெரியும்.

காதலில் சிக்கிவிட்டால் ஒருவனின் நடை, உடை, பாவனை, குணம் என எல்லாமே ஒரு மாற்றத்திற்கு உள்ளாகும். இது அவனின் காதலியின் மனம்கவர அவன் எடுக்கும் முயற்சி. இதில் எந்த தவறும் இல்லை, ஆனால் காதல் வந்த புதிதில், காதலிக்காக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு சில நாட்கள் கழிந்ததும் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அதுவே விபரீதம் ஆகிவிடும்.

காதலர்களுக்குள் என்னதான் புரிதல் இருந்தாலும், அவ்வபோது சிறு ஆச்சிரியங்களும், பரிசு பொருட்களும் அந்த உறவிற்கு நீண்ட நாட்கள் உயிரூட்டும்.

அவ்வகையில், காதலில் விழுந்திருக்கும் புதிய ஜோடிகளும், காதல் கசிந்துவிட்டதா என யோசிக்கும் பழைய ஜோடிகளும், தனிமையில் வாடியது போதுமென்று தங்களின் காதலை தேடி அலைபவர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரஸ்யமான லவ் டிப்ஸ் இதோ..

காதலருக்கு சிறிய பரிசு கொடுத்தாலும், புதுமையான முறையில் கொடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பூச்செண்டில் 12 ரோஜாக்கள் இருந்தால், அதில் 11 சிவப்பு ரோஜாக்கள் மற்றும் ஒரேயொரு வெள்ளை ரோஜாவை வைத்து கொடுத்து, அந்த வெள்ளை ரோஜாவை போல் நீ தனித்துவம் மிகுந்தவர் என கூறுங்கள்.

காதாலருக்கு பிறந்தநாள் என்றால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பும்போது, காதலரின் பெற்றோருக்கு "நன்றி" என்று எழுதி ஒரு பூச்செண்டை அனுப்புங்கள்.

அவ்வபோது எதிர்பாராத ஆச்ச‌ரியங்கள் கொடுத்து உங்கள் துணையை திக்குமுக்காட வையுங்கள்.

முயன்றவரை ஒன்றாக நேரம் செலவழிக்க பாருங்கள். யோகா, நடை பயிற்சி, உடல் பயிற்சி ஆகிவற்றை இருவரும் ஒன்றாக செய்து பழகுங்கள்.

உங்களின் துணையை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்ய‌த் தயங்காதீர்கள்.

ஒரு விஷயத்தை பற்றி முடிவு செய்யும் முன் உங்களின் காதலரின் எண்ணம் என்னவென்று தெரிந்துகொண்டு செயல்படுங்கள்.

கையை பிடித்து கொள்ளுதல், தோலில் சாய்தல், செல்லமாக அடித்தல் போன்ற செய்கைகள் காதலில் மிக முக்கியமானவை என்பதை மறவாதீர்கள்.

எவ்வளவு பிசியாக இருந்தாலும் காதலுக்காக நேரம் ஒதுக்குங்கள்.

வருங்காலத்தை பற்றி இருவரும் சேர்ந்தே முடிவு செய்யுங்கள்.

ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, மற்றவரின் எண்ணத்தை மதித்து, அன்பை பகிர்ந்து கொண்டால் இன்றைய காதலர்கள், காலம் முடியும் வரையிலும் காதலர்கள் தான். 

பெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்!

இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை.

கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கிறது.

ஆண், பெண் இருவரும் பொருளாதாரத்தில் பெற்றோரை சாராமல் இருந்துவிட்டால் அவர்களின் சம்மதத்தை கூட கேட்காமல் அவசரமாக நான்கு நண்பர்கள் முன்னிலையில் ஆயிரம் காலத்து பயிரினை நடத்து வங்குகிறார்கள்.

உங்கள் காதல் உண்மையாக இருந்து இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் பிரச்சனை இல்லை.அதுவே வயதால் ஏற்படும் சலனத்தால் காதலித்து அது திருமணத்தில் முடிந்து இல்லற வாழ்வில் பிரச்சனை வரும்போதுதான் பெற்றோரின் நினைவு வரும்.

காலம் கடந்த பிறகு இதையெல்லாம் யோசித்து சங்கடபடுவதை விட காதலிக்கும்போதே அதை பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வது நல்லது.உங்கள் காதல் நிலைப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவர்.

இவை எல்லாவற்றையும் விட இருவீட்டாரின் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும் நடக்கும் திருமணம் நீடித்து நிலைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சில முறைகளை கையாளலாம். அவற்றில் சில,

1. பெற்றோருக்கு சிறிது நேரம் கொடுங்கள்.
2. அவர்கள் உங்கள் காதலரை வெறுக்கும் காரணத்தை கண்டறியுங்கள்.
3. உங்கள் காதலரிடம் இதைபற்றி பேசாதீர்கள்.
4. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுங்கள்.
5. அவர்களின் இடத்திலிருந்து யோசியுங்கள்.
6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
7. பெற்றோரை வெறுத்துவிடாதீர்கள்.
8. பொறுமையாக இருந்து உங்கள் காதலை நிரூபியுங்கள்.
9. அவர்களின் விருப்பபடி உங்கள் காதலரின் நடவடிக்கைகளை மாற்றமுடியுமா என்று பாருங்கள்.
10. உங்களது பெற்றோர் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

சில நேரங்களில் இவை அனைத்தும் உபயோகப்படாமல் போகலாம். பெற்றோர்கள் வறட்டு கெளரவம், அந்தஸ்து போன்ற காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்தெடுங்கள்.

காதலில் செக்சுக்குத் தடை!!!

செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது.

தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள்.

காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.

பெண், ஆண் இருவருக்குமே திருமணம் வரையில் கூட கற்பை காப்பாற்ற முடியவில்லையே என்ற தன்னிரக்கம் ஏற்பட்டுவிடும்.

ஓதோ ஒரு மிகப்பெரிய குற்றம் செய்ததாக மனம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

ஆண் பெண் இருவருக்கும் பிளாக்மெயில் செய்வதற்கு இந்த சம்பவம் வழிவகுத்துவிடும்.

அடிக்கடி தவறு செய்யத் தூண்டும்.

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில் தேவையில்லாத கர்ப்பம் ஏற்பட்டு அதனால் பெரும் பிரச்சனைகள் உண்டாகலாம்.

எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும். காதலில் செக்ஸ் கிடைத்துவிட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பெரும் ஆர்வமும் இருக்காது.

 பெண் யார் கேட்டாலும் உறவுக்க சம்மதிப்பவராக இருப்பார் என்ற எண்ணம் ஆணுக்கு வந்துவிடும்.

திருமணம் முடித்த பின்னர் அவர்களுக்குள் புதிதாக ஒன்றுமில்லை என்பதால் அதற்காக அவசரப்படுதல் நின்றுபோய்விடும். பெண் அதற்குப் பின் அதிகமாக அவசரப்படுபவளாகவும், ஆண் நழுவுபவனாகவும் இருப்பான்.

காதலர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வருவது சகஜம்தான். அப்படிப்பட்ட நேரத்தில் செக்¤க்கு சம்மதித்தது பற்றி கேவலமாக பேசப்பட்டுவிட்டால் காதல் முறிந்துபோய்விடும்.

செக்ஸ் உறவு முழுமையானதாக இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிறர் மீது சந்தேகம் வந்துவிடும். செக்ஸ் திருப்தி தர முடியாத இவருடன் எப்படி வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும்.

மீண்டும் ஒருமுறை சம்மதிக்காவிட்டால், புதுசா என்ன என்பது போன்ற பேச்சுக்கள் வந்துவிட்டால் காதலில் மரியாதையும், அன்பும் காணாமல் போய்விடும்.

இருவருக்குள்ளும் செக்ஸ் உறவு இருக்கிறது என்பது பிறருக்குத் தெரிந்தால் அவர்களை காதலர்கள் என்று பார்க்காமல் செக்ஸ் உறவுக்காக அலைபவர்கள் என்று தவறுதலாகவே பேசுவார்கள்.

ஆண், பெண் இருவரிடமும் ஒரு அவநம்பிக்கை வந்துவிடும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தேவையில்லாமல் அவசரப்பட்டுவிட்டோமே என்ற குழப்பம் இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவேளை காதலரை கைப்பிடிக்க முடியாமல் போய்விட்டால், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு அவருக்கு கற்பினை காணிக்கையாகத் தரமுடியாமல், ஓர் எச்சில் பண்டமாக தன்னுடைய உடலை கருத வேண்டிவரும். 

ஆணுடனான உறவில் ஏமாற்றமடைதல்

பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள்.

பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 விழுக்காடு பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறெல்லாம் நடக்காதபோது 40 விழுக்காடு பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். 42 விழுக்காடு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம்.

வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள். அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள்.

இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும். 

அறியாப்பருவக் காதல்!!!

இது டீன் ஏஜில் உருவாகும் காதலை மட்டுமே குறிப்பது அல்ல. இருவரும் சேர்த்து தனித்து வாழ தகுதிபெறாத காதலே அறியாப்பருவக் காதல் எனப்படுகிறது. இந்த வயதில்தான் கண்டிப்பாக எல்லா மனிதர்களும் காதலில் விழுகிறார்கள். மனசுக்குப் பிடித்தவர்கள் என்று எவரையாவது அடையாளம் கண்டுகொள்கிறார்கள். காதல் என்பதை உயிரினும் மேலாக நினைப்பார்கள். ஆனால் இந்தக் காலக்கட்டத்தில் காதலில் ஒரு மிகப்பெரிய குறை இருக்கும்.

அதாவது இன்று தான் பார்க்கும் ஓர் அழகி அல்லது அழகனைவிட சிறப்பாக இன்னொருவரைப் பார்க்க நேர்ந்தால், காதல் அப்படியே அவர் பின் ஓடிவிடும் அதுவரை இருந்த காதல் ஒத்துவராது என தனக்குள் முடிவு கட்டிவிட்டு அடுத்தக் காதலில் இறங்கிவிடுவார்கள்.

தன் மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்திற்கும் உருவம் கொடுக்க நினைப்பார்கள். தன்னிடம் என்னென்ன தகுதிகள் இருக்கின்றன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், எதிரே இருப்பவரின் தகுதியினை மட்டுமே பார்ப்பார்கள்.

தனக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர், ஆசிரியை, சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு விரர்கள் என காதலிக்கும் நபர்கள் இயல்பு வாழ்க்கையில் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்களை மற்ற பிரிவில் சேர்க்காமல், மிக எளிதான வாழ்வினை சமாளிக்க முடியாதவர்கள் என்ற பிரிவில் அறிவியலாளர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

காதலை அல்லது காதலனை வாழவைப்பதற்கு அடிப்படைத் தேவையான வருமானம், மன உறுதி, உடல் உறுதி போன்றவை இல்லாதவர்கள் எல்லாம் இந்த வகையில் வருவார்கள்.

பணம் சம்பாதிக்காதவர்களுக்கு காதல் வரக்கூடாதா எனக் கேட்கலாம். காதல் வருவதற்கு வருமானம் தடையாக இருக்காது.

ஆனால் நாம் காதலில் வெற்றி பெறுவதைப் பற்றியும், திருமணம் முடிப்பது பற்றியும், அதற்குப் பின்னரும் வாழ்நாள் முழுவதும் காதல் தொடர்வதற்கான வழி சொல்லிக் கொண்டிருப்பதால், வருமானம் இல்லாதவர்கள் காதலின் அடுத்தக் கட்டத்தை தொடமுடியாது என்பதுதான் நிஜம்.

எப்படி ஒரு டீன் ஏஜ் வயதில் திருமனம் என்பது ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதில் சமூகம் உறுதியாக இருக்கிறதோ, அப்படியே காதலில் விழுந்த ஆண் அல்லது பெண்ணிடம் வாழ்வதற்கு ஆதாரத் தேவையான வருமானம் இல்லாத பொழுது, அந்தக் காதலும் ஏற்றுக்கெள்ளப்படாது.

வருமானம் இல்லாதவர்களும் டீன் ஏஜ் வயதினரும் காதல் செய்ய முழுத் தகுதி பெற்றவர்கள். காதல் செய்ய தகுதி படைத்தவர்கள் எனும் பொழுது காதலிக்கப்படவும் இவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் வெற்றி?

டீன் ஏஜ் வயதில் காதல் என்பதை சட்டமும், சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.

அதேபோல் வருமானம் இல்லாதபட்சத்தில் காதலின் அடுத்தக்கட்டத்தை தொட சம்பந்தப்பட்டக் காதலர்களே விரும்பமாட்டார்கள். அதனால் டீன் ஏஜ் காதலர்கள் எல்லாம் இந்த அத்தியாயத்தோடு ஜோராக கைதட்டி விடைபெறலாம். இதுவரை வருமானம் இல்லை என்றாலும், வருமானத்திற்கு தீவிர முயற்சி எடுக்கும் காதலர்கள் தவிர, மற்றவர்களும் வெளியேறிவிடலாம். 

புதுசுக்கு வலை வீசு!!!

காதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் இருக்க முடியுமா?

எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே.

மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

காதல் தோல்விக்காக சிலர் தற்கொலை செய்கிறார்களே என்ன செய்வது?

இவ்வுலக வாழ்வு என்பது ஓர் இனிய வரம். இந்த அழகான பூமி, அழகான மாந்தர், அற்புத வாழ்க்கை எல்லாம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல. இதனை முழுவதுமாய் அனுபவித்து வாழவேண்டும்.

சிறப்பாய் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் காதல். காதல் இல்லை என்றதும் உலக வாழ்வே வேஸ்ட் என தன்னைத்தானே அழித்துக்கொள்பவர்கள் மடையர்கள், முட்டாள்கள்.

வேறு என்ன சொல்வது? வாழ்வை ரசிக்கத் தெரியாததால் அவர்களால் காதலையும் ரசித்து ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காதலில் வெற்றியடைந்தவர்கள் அடுத்ததாக திருமணம், குழந்தை, படிப்பு என எதிர்காலத்தை யோசித்து காதலை பெரும்பாலும் தொலைத்துவிடுவார்கள்.

ஆனால் காதலில் தோற்றவர்கள் அதனை வாழ்நாள் முழுவதும் மறப்பதே இல்லை. மனதிற்குள் ஒரு தாஜ்மகால் கட்டி அங்கே தோற்கப்பட்ட காதலை பூஜித்து வருவார்கள்.

ஒரு வகையில் காதலில் தோல்வி என்பதும் சுகமான அனுபவமே. நீங்கள் விரும்பிய ஒரு நபர் கிடைத்துவிட்டால் அவர் மீதிருந்த ஆசை, ஆர்வம், அன்பு எல்லாமே குறைந்துபோய்விடலாம்.

உங்களுக்குத் தெரியாமல் அவரிடம் சில அதிர்ச்சிகரமான விஷயங்கள் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் மனதில் பரிசுத்தமாக இருக்கக்கூடியது காதல் தோல்வி.

காதலில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் எப்போது காதலிக்கத் தொடங்குவது என சிலர் கேட்பார்கள். காதல் என்பது சுவாசம் மாரிரி, ஒரு நொடியும் சும்மா இருக்கக்கூடாது. அதனால் ஒரு காதல் முடிந்துவிட்டால், உடனடியாக அடுத்த காதலை தொடரலாம். அல்லது உங்கள் மனம் சமாதானமான பின் தொடரலாம். 

ஏடாகூட காதல்!!!

இப்படியெல்லாமா காதல் என்பது இருக்கும் என்று பலர் அதிசயிப்பார்கள்.

ஆணும் ஆணும் காதலிப்பது, பெண்ணும் பெண்ணும் காதலிப்பது என்பதெல்லாம் ஏதோ ஒரு புரட்சி என்று தோன்றுமே தவிர, இது காதல் கிடையாது. உடலில் ஜீன்கள் செய்யும் சேட்டை அவ்வளவுதான்.

இதுபோலவே தவறான உறவு முறைகளுக்குள் உண்டாகும் காதலும் ஏடாகூடக் காதலே. அண்ணன் உறவு முறை, தகப்பன் மகள் உறவு முறை போன்றவற்றில் காதல் ஏற்பட்டுவிட்டது என்பதை சமூகம் ஒப்புக்கொள்ளாது.

உண்மையில் என் சகோதரரை காதலிக்கிறேன் என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணைப் பொறுத்தவரை அக்மார்க் நிஜமாகவே இருக்கலாம். ஆனால், அதற்கான இதனை காதல் எனும் வரிசையில் சேர்ப்பித்துவிட முடியாது.

பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும், கேலி கிண்டலுக்கும் ஆளாகும் உறவு முறைகளைக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட காதலில் இருந்தும் வெளியேறுவதுதான் நல்லது.

உண்மைக் காதல் என இதனைக் கடைசி வரை கடைப்பிடிக்க நினைத்தால் கண்டிப்பாக பிற்காலத்தில் முன்னர் செய்த காதலுக்காக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

திருமணக் காதலர்கள்!

குறிப்பாக நம் நாட்டைப் பொறுத்தவரை மிக அதிகமான திருமணம் என்பது பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் திருமணமாகும்.

திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழையும் வரை ஒருவரை ஒருவர் முழுசாக பார்த்து கூட இருக்கமாட்டார்கள். ஒரு வார்த்தை கூட பேசியிருக்க வாய்ப்பிருக்காது. ஆனால் காலத்தின் கட்டாயமாக வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

உறவுகளுக்காகவும், சமுதாயத்தின் கட்டாயத்திற்காகவும் சேர்ந்து வாழும் பெரும்பாலான தம்பதியர்கள் கடமைக்காக கணவன்-மனைவியாக வாழ்கின்றனர். இதில் காதல் என்பது அபூர்வமாக ஒரு சிலரிடமே பூக்கிறது.

கணவன்-மனைவி இருவரும் காதலர்களாக கடைசி வரை சந்தோஷமாக வாழமுடியும் என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஓர் ஆணால் இன்னொரு பெண்ணைத் தேர்வு செய்ய முடியாது என்பதும், அந்தப் பெண் வேறு வழியின்றி கணவனாக வந்திருக்கும் ஆணை மட்டுமே காதலிக்க வேண்டும் என்ற கட்டாயம் தவிர, மற்ற எல்லா விஷயங்களும் காதலர்களைப் போலவே இவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.

செயற்கை அழகு வேண்டாம்!!!

பார்வை நிலை முடிந்து இயல்பாக பேசும் நிலையில் இருப்பதையே நிறைய பேர் காதல் என எண்ணிக் கொள்கிறார்கள். அதன்பிறகு அதிகப் பிரசங்கித் தனமாக ஏதாவது செய்யும் போதுதான் ஏடாகூடமாகிவிடுகிறது.

முதலில் ஆண்கள் பெண்களை எப்படி கவர்வது என்று பார்ப்போம்.

பார்வை நிலையில் வெற்றி அடைந்தாகிவிட்ட நிலையில் இனி புற அழகிற்கு என அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை.

இந்த நிலையில் ஒரு சிலர் கதாநாயகன் மாதிரி தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்து நடை, உடை, பாவனைகளை மாற்றுவார்கள். இதனை பெண்கள் எவரும் விரும்புவதில்லை என்பதை பல்வேறு ஆராய்ச்சிகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.

தான் விரும்பும் நபர் ஓர் இடத்திற்குச் செல்லும்போது, அவரை பல்வேறு பெண்கள் ஆசையாக, ஆர்வமாக பார்ப்பது பொறாமையைத் தூண்டுவதுடன் எரிச்சலையும் கொடுத்துவிடும். அதனால் இயல்பாகவே இருங்கள்.

உங்கள் புறத்தோற்றம் பிடித்துப்போன பிறகு பேச்சு நிலைக்கு வந்திருக்கிறீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனால் அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இனி கிடையாது. அதற்காக இத்தனை மிடுக்காக செய்துவந்த உடை அலங்காரம், உடல் தூய்மை என அனைத்தையும் விட்டுவிடலாம் என அர்த்தம் இல்லை.

தன்னிடம் ஓர் ஆண் பேசும்பொழுது வேறு எந்த தொந்தரவும் வருவதை பெண் விரும்பமாட்டாள். அதேநேரம் அவளது கண்களுக்கு நீங்கள் மிக அழகாகவே தெரிவீர்கள்.

இதற்கு ஓர் அழகான உதாரணம் சொல்லலாம்.

சுதா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எத்தனையோ அழகான பையன்கள் அவளுடன் பேசுவதற்கு போட்டி போட்டார்கள். அவள் அனைவரையும் ஒரு புன்னகையுடன் ஒதுக்கிவிட்டாள்.

வழக்கமாய் அவள் வந்து செல்லும் பஸ்ஸில் கண்டக்டர் மிகவும் சுறுசுறுப்பாக, நாகரீகமாக பழகுவது அவளைக் கவர்ந்து இழுத்தது. அவர் அதிகமாகப் படிக்காதவர், மிகவும் கருப்பான நிறம் கொண்டவர். சுதாவை விட தாழ்ந்த ஜாதி என எதுவுமே அவளை பாதிக்கவே இல்லை.

சுதாவே அவளது காதலை அவனிடம் சொன்னாள். இன்று அவர்கள் இருவரும் ஒரு வெற்றிகரமான தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த சுதாவைப் போன்றுதான் கிட்டத்தட்ட எல்லா பெண்களும் தனது காதலன் நல்லவனாக, வல்லவனாக, நகாரீகமானவனாக, உழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் அதிக முன்னுரிமை கொடுக்கிறார்களே தவிர, அழகுக்கு அல்ல.

சினிமா நட்சத்திரங்களைப் போன்று தலை அலங்காரம், உடை அலங்காரம் செய்வது எல்லாம் நகைச்சுவையாகவே தெரியுமே தவிர, மனதினைக் கவராது. அதனால் முதலில் எப்படி இருந்தீர்களோ அப்படியே எப்போதும் இயல்பாக இருங்கள். தேவையின்றி நீங்களும் குழம்பி, பெண்களையும் குழப்பாதீர்கள். 

உஷார் ஆணே உஷார்...

காதலில் ஆண்கள்தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டாம். பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. அதனால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது என்பதைப் பார்க்கலாம்.

பணத்திற்காக எதையும் செய்பவள் எனத் தெரியவந்தால்.

உடல் ரீதியான தொடர்பு பல ஆண்களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்...

பரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து, பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்...

நான் மட்டும் இல்லையென்றால், உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டம் தட்டுபவளாக இருந்தால்...

ஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக சொன்ன பின்னரும், பெண் அவளது குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தால்...

சில ஆண்களுடன் செக்ஸ் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்...

எதற்கெடுத்தாலும் ஆணை குறை சொல்பவளாக, வேலை ஏவுபவளாக இருந்தால்...

திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் தட்டிக் கழிப்பவளாக இருந்தால்...

என் அழகைப் பார்த்து இன்று இரண்டு நபர்கள் மயங்கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக்கடி புகழ்ந்து கொள்பவளாக இருந்தால்...

ஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறாள் என தெரியவந்தால்...

கல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை பண்ணினா லேசுல விடமாட்டேன், போலீஸ்ல சொல்லி உள்ளே போட்டுருவேன் என மிரட்டுபவளாக இருந்தால்...

செக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்...

திருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்...

அடிக்கடி விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கேட்டு நச்சரிப்பவளாக இருந்தால்...

பழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருத்தல், புதிய ஆண்களிடம் காதலைத் தூண்டுவது போல பேசுதல் இருந்தால்...
இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எவ்வளவு சீக்கிரம் விலகுகிறானோ அவ்வளவு நல்லது.  

உஷார் பெண்ணே உஷார்...

காதலிக்கும் பெண்கள் கீழ்க்கண்ட குறைகளை ஆண்களிடம் காணும்பொழுது, இதையெல்லாம் திருமணத்திற்குப் பிறகு கண்டிப்பாக திருத்திவிடலாம் என்று முட்டாள்தனமாக எண்ணிக் கொண்டிருக்காமல் காதலில் இருந்து விலகிவிடலாம்.

பணத்திற்காக அல்லது சொத்திற்காகத்தான் காதலிக்கிறான் என்பது உறுதியாக தெரியவந்தால்...

பெண் வேலை பார்த்து வரும் பணம் குடும்பத்திற்குப் போதும், வேலை பார்க்காமல் ஜாலியாக சுற்ற வேண்டும் என்ற மனநிலையில் ஆண் இருப்பதை அறிந்துகொண்டால்...

தங்கை அல்லது தோழிகள் எவரிடமாவது காதல் வசனங்களை பேசி கவிழ்க்க முயற்சி செய்வது தெரிந்தால்...

கவர்ச்சியாக உடை அணிந்துகொள், நான் சொல்லும் நபர்களிடம் நீ அன்பாகப் பேசினால், நான் எளிதாக காரியம் சாதித்துக்கொள்வேன் என்பதுபோல் பேசினால்...

காதலிக்கத் தொடங்கிய பின்னரும் வேறு ஏதாவது ஒரு பெண்ணிடம் அல்லது விபச்சாரப் பெண்களிடம் உடலியல் ரீதியான உறவு இருப்பதாகத் தெரியவந்தால்...

மிக அதிகமான ஆசை உள்ளவனாக, தேவையில்லாத தொந்தரவு கொடுப்பவனாக, நிலைமையை புரிந்து கொள்ளாதவனாக இருந்தால்...

முறிந்துபோய்விட்டது என சொன்ன முன்னாள் காதலியுடன் இன்னமும் சந்திப்பு, தொடர்பு இருப்பதாகத் தெரிந்தால்...

வேறு யாராவது பெண் காதலைச் சொன்னபோது, தற்போதைய காதல் பற்றி எதுவும் சொல்லாமல் டபாய்ப்பதாகத் தெரிந்தால்...

செக்ஸில் விபரீத ஆசைகள் கொண்டவர் என்பது தெரிந்தால், அதாவது இரண்டு பெண்கள், மூன்று பெண்கள், குரூப் செக்ஸ் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுபவராக இருந்தால்...

தவறான நடவடிக்கையினால் செக்ஸ் வியாதி வந்தவர் என தெரியவந்தால்...

அவ்வப்போது மனநிலை பாதிக்கப்படுபவர் என்பது தெரிந்தால்...

நடக்காத விஷயத்தை வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருப்பவர் என்றால், அதாவது ஒரு நாளாவது ஐஸ்வர்யா ராயுடன் வாழ்ந்துவிட வேண்டும் என விரும்பினால்...

செக்ஸில் ஆர்வம் இல்லாதவர் அல்லது ஆண்மைக் குறைபாடுடன், உறவுக்கு லாயக்கில்லாதவர் எனத் தெரியவந்தால்...

அளவுக்கு அதிகமாக சந்தேகப்படும் குணம் கொண்டவன் எனத் தெரிந்தால்...

பெண்கள் அடிமையாக வீட்டோடு அடைந்து கிடக்க வேண்டும், முக்கியமான முடிவுகள் எல்லாம் ஆண்தான் எடுக்க வேண்டும் எனும் பெண் அடிமை வியாதியாக இருக்கும் பட்சத்தில்...

பிறரது துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ மனப்பான்மையில் இருந்தால்...

காதல் நாளை கொண்டாட ஃபெங் சூய் ஆலோசனைகள்!!!



மனிஷா கெளசிக்

வாலண்டைன் நாளுக்கு மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கை முழுமைக்குமானது இந்த ஆலோசனைகள். உங்களில் இன்னமும் தனியாய் இருப்பவர்கள், நமக்குத்தான் காதல் வாழ்க்கை தொடங்கவில்லையே, அதனால் இந்த நாளைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று நினைக்கலாம், உங்கள் காதல் இந்த நாளிலேயே தொடங்கலாம். வாலண்டைன் நாளுக்குப் பின்னரும் உங்கள் உறவை நீட்டிப்பதே இந்த ஆலோசனைகளின் நோக்கமாகும். உங்களுடைய காதலருக்கு ஏதாவது ஒரு பரிசை நீங்கள் திட்டமிட வேண்டும், அதே நேரத்தில் அவர்களிடம் இருந்து வரக்கூடிய பரிசையும் எதிர்நோக்க வேண்டும். இப்படிப்பட்ட சிறு பரிசுகள் கூட உங்களின் உறவை ஆழப்படுத்தலாம்.

வாலண்டைன் நாள் என்பது உங்களுடைய காதலை வெளிப்படுத்துவதற்கும், அதன்மூலம் வாழ்க்கை முழுவதும் அந்த அனுபவத்தை நீட்டிக்கச் செய்வதற்குமான ஒரு வாய்ப்பாகும். அது மட்டுமின்றி, இந்த நாளில் உருவாகும் அந்த நெருக்கம் இந்த நாளையும் தாண்டி நீடிக்க வேண்டும் என்பதே. ஃபெங் சூயின் சாதகமான சக்தியூட்டும் பரிசுகள் குறித்த ஆலோசனைகள், இந்த நாளையும் தாண்டி உங்கள் மனதில் வாலண்டைன் நினைவுகளால் நிறைக்கும்.

ஃபெங் சூய் அணுகுமுற

உங்களுடைய காதலருக்கு நீங்கள் அளிக்கும் பரிசின் சக்தியை அவர் வாழ்நாள் முழுவதும் இன்உணர்வை அளிக்கவல்லதாக இருக்க வேண்டும். அதில் சில:

() நன்கு அலங்கரிக்கப்பட்ட, சிறிய அளவிலான இயங்கக் கூடிய நீருற்றை பரிசாக தரலாம். நீரின் மென்மையான ஒலி அதில் இருந்து வருவதாக இருக்க வேண்டும். இது உங்களுடைய பணி அழுதத்தை குறைப்பதாக இருக்கும் என்பது மட்டுமின்றி, உங்கள் வாலண்டைனின் வாழ்க்கை முழுவதும் சக்தி அளிப்பதாக இருக்கும்.

() காற்று மோதி காதல் ஒலி எழுப்பும் மணிக் கொத்தை அளிக்கலாம். இது உங்கள் இல்லத்தில் எப்போதும் ஒரு சாதகமான சக்தியை அளித்துக்கொண்டே இருக்கும். இசை குறுவெட்டுகளும் இப்படிப்பட்ட சாதகமான சக்தியை அளிக்கக் கூடியவையே. இசை எப்போதும் உற்சாகத்தை அளிக்கவல்லது மட்டுமின்றி, அது வெற்றிச் செய்தியையும் அளிக்கும்.

உங்கள் காதலருக்கு பாரம்பரியமான வாலண்டைன் பரிசுகளை அளிப்பதாக இருந்தால், அதனை அவர் ஏற்கக் கூடியதாக பார்த்து தெரிவு செய்ய வேண்டும். பாரம்பரிய பரிசுகள் என்பது அது வாழ்க்கை முழுவதும் நீடித்து இருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பரிசுகளில் சில:

() வீட்டிற்குள் வளர்க்கக் கூடிய தாவரங்கள் ஏதாவது அல்லது காதல் சின்னமான ரோஜாவை ஒரு ஜோடியாக அளித்திட வேண்டும். ஆனால் அந்த பரிசுகளையும் தாண்டியது உங்களின் காதல் என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும், இல்லையேல் உங்கள் வாழ்க்கையில் பின்னாளில் அது சிக்கலை ஏற்படுத்திவிடும்.

() உங்கள் நகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சிக்கோ அல்லது கலை நிகழ்விற்கோ தொடர்ந்து சென்று இணைந்து பார்க்கக் கூடிய வகையில் பல நாட்களுக்கு பார்வைச் சீட்டுகளை பெறவேண்டும். அல்லது திரைப்பட விழா ஏதாவது நடந்துக் கொண்டிருந்தால், அதற்கான பார்வையாளர் சீட்டுகளை வாங்கிச் சென்று இணைந்து பார்க்கலாம்.

 () உங்களுடைய வாலண்டைன் சாக்லெட் விரும்பியாக இருந்தால், அவருக்கு பிடித்த சாக்லெட்டுகளை டஜன் கணக்கில் வாங்கி பரிசாக அளிக்கலாம். சாக்லெட்டுகளின் உள்ளே கிரீம் வைக்கப்பட்டிருப்பதாக இருந்தால் மிகவும் நல்லது.

() நீங்கள் அளிக்கக்கூடிய பரிசு எதுவாக இருந்தாலும் அது ஆண்டு முழுவதும் சக்தியை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதன் மூலம் உங்களின் உறவு பலப்பட வேண்டும்.


உங்கள் படுக்கையறையை அமைப்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அது வீட்டின் தென் கிழக்கு திசையில் இருக்க வேண்டும். படுக்கையறையில் கீழ்க்கண்ட பொருட்களை அழகாக அமைக்கலாம்.

() ஒரே அளவிலான மலர்களை வைக்க வேண்டும்

() ஒன்றை ஒன்று பார்த்த வண்ணமிருக்கும் இரண்டு மணிப் புறாக்களின் பொம்மைகளை வைக்கலாம்.

() இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளை, தங்கள் கழுத்துகளை ஒன்றோடு ஒன்று பிண்ணிக்கொண்டு நிற்பது போன்ற பொம்மைகளை வைக்கலாம்.

() இரண்டு இதயங்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு படம் - அதன் மத்தியில் 2 எண் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

வாலண்டைனை எதிர்பார்த்திருக்கிறீர்களா?

உங்களுக்கு இன்னும் காதல் துணை அமையவில்லையா? அப்படியானால், உங்கள் படுக்கையறையின் கிழக்குப் பகுதியை அழகிய பசுமையான தாவரத்தால் அழகு செய்யுங்கள். அந்த தாவரத்தின் சக்தி, புதிய உறவை ஏற்படுத்தவும், இருக்கும் உறவை பலப்படுத்தவும் உதவும்.

வாலண்டைன் நாளிற்கு நீங்கள் பரிசளிப்பதற்கு யாரும் இல்லையா? அப்படியானால், உங்களுக்கு நீங்களே ஒரு பரிசை தெரிவு செய்து அளித்துக்கொள்ளுங்கள். அன்பை, பரிவை, ஒருவர் மீதான மற்றவரின் ஆழந்த பற்றை அங்கீகரிப்பதுதான் வாலண்டைன் நாளின் நோக்கமாகும்.

இந்த நாளில் பெரிய விருந்தெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒன்றாக ஒரு நாள் சுற்றுலா அல்லது ஒரு விருந்திற்குச் செலவது போதுமானது. உங்களது காதலரின் அன்பையும் உறவையும் மதிப்பதும், அதில் உறுதியாக இருப்பதும்தான் முக்கியமானது. 

ஆடம்பரக் காதல்!!!

காதல் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துக்காகவே சிலர் காதலல் விழுவதுண்டு. பணம், செல்வாக்கு, ஆள் வலிமை உள்ள ஆண்கள் காதலில் தங்கள் பலத்தினை காட்டவேண்டும் என்பதற்காக, யாராவது ஒரு பெண் மீது குறி வைத்து காதல் காட்டுவார்கள்.

அந்தக் காதலை ஜெயிப்பதற்காக பணம், பலம் அனைத்தையும் காட்டுவார்கள். திருமணம் என்ற சூழல் ஏற்படும்போது மிக நல்ல பிள்ளையாக மாறி, "அம்மா, அப்பா சொல்படிதான் நடப்பேன்" என்பார்கள். ஏனென்றால் இவர்களது பெற்றோரின் சொத்து அவசியம் தேவை என்பதுதான் உண்மை.

இதேபோல் சில பெண்களும் தங்கள் இளமை மற்றும் அழகினை மற்றவர் முன் பறைசாற்றுவதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகுவார்கள். அவர்களுக்கு என்று ஒரு எல்லை வைத்துக்கொண்டு, அதற்குப் பின் அந்தக் காதலர்களை அவமரியாதை செய்து அனுப்பிவிடுவார்கள்.

அதாவது இப்படிப்பட்டவர்கள் காதல் என்பதை ஒரு பொழுதுபோக்காக ஜாலியாக எடுப்பவர்கள். இப்படிப்பட்டவர்களிடம் சிக்கி ஏமாந்து போகும் ஆண், பெண்தான் ஏமாற்றம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற மோசமான முடிவினை எடுப்பதுண்டு.

இப்படிப்பட்ட காதலைக் கண்டுகொள்வதும், விலக்குவதும் மிக எளிது. அதாவது ஆரம்பமே மிக அவசரமாக இருக்கும்.

"காதலிக்கிறேன்" என்ற ஒரு வார்த்தையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சகஜமாகப் பேசுவார்கள். எல்லா முடிவுகளும் அவர்கள் எடுப்பதாகவே இருக்கும். நாளை ஒரு இடத்திற்குப் போகலாம் என முடிவெடுத்தால் எங்கே போவது, என்ன செய்வது, எப்பொழுது திரும்புவது என எல்லாவற்றையும் அவர்களே முடிவெடுப்பார்கள்.

இந்த வகையான ஆண், பெண் இருவரும் திருமணம் பற்றி பேசமாட்டார்கள். நம்பு என்று சந்திப்பார்கள். இவர்களை நல்ல காதலர்களாக மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவது போன்று கடினமானது.

எனவே, இப்படிப்பட்ட நபர்கள் என்று அறியவரும் பொழுது இது காதல் இல்லை என்று தெளிவடைவது நல்லது. மேலும், அவர்களுடன் நட்பினை தொடர்வதும் ஆபத்தானதே. ஏதாவது ஒரு கடினமான இக்கட்டான சூழலில் யாராவது ஒருவருடன் வாழ முடிவெடுத்துவிடுவார்கள். அவர்களுடன் கடைசி வரை ஓர் அடிமை நிலையில் வாழ வேண்டுமே தவிர அந்நியோன்யமாக வாழ முடியாது. 

காதலர் தினத்தில் திருமணம்!!!


மனிஷா கெளசிக் - ஜோதிட ஆலோசகர்

அன்பிற்கும் காதலிற்குமான மாதமாக பிப்ரவரி மாதம் கருதப்படுகிறது. அதிலும் பிப்ரவரி மாதத்தில் வரும் காதலர் தினத்திலோ அல்லது அந்த நாளின் நெருக்கத்திலோ திருமணம் செய்து கொள்வது என்பது மிகவும் பொருத்தமுடையது. திருமணத்தைப் பற்றி தாமஸ் மூர், “வேறுபட்ட விதியையும், வாழ்வையும் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் இணைக்கும் உன்னதமான பந்ததைத்தை ஏற்படுத்துவது திருமணமாகும்” என்று கூறினார்.

ஒவ்வொரு நாளும் நமது வாழ்வு என்பதும் கூட நமது ஆத்மனின் புரியாத, கால வரையறையற்ற ஒரு பந்தம்தான். காதலர் தினத்தில் தங்களது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள எனது வாசகர்கள், அது தொடர்பான பணிகளில் மூழ்கியுள்ள வேளையில் நான் இதனை எழுதுகிறேன். இருந்தாலும், உங்களுடைய வாழ்வை அன்பினாலும், காதலாலும் நிரப்ப நினைத்தால் உங்கள் திருமணத்திற்கு நான் கூறும் இந்த ஆலோசனைகளையும் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் மண நாளை மேலும் நிறைவுடையதாக்கும்.

உங்களுடைய திருமண அழைப்பிதழில் இருந்தே காதலர் தின வண்ணத்தை கொடுக்கத் துவங்குங்கள். திருமண அழைப்பிதழில் மன்மதனின் அழகிய உருவத்தை பொறித்து, வார்த்தைகளை தங்க நிறத்தில் இருக்குமாறு அமையுங்கள். உங்கள் நாளின் வண்ணத்தை உங்கள் அழைப்பிதழ் பறைசாற்றட்டும். திருமண அழைப்பிதழில் உங்கள் இருவரின் புகைப்படங்களையும் பொறித்திடுங்கள்.

உங்கள் திருமண பந்தத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் அந்த நிகழ்விற்கான மண்டபத்தை மிக எச்சரிக்கையாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் எந்த மண்டபத்தை தெரிவு செய்தாலும், அங்கு ஏராளமான மெழுகு வர்த்திகளை கொளுத்தி வைக்கும் வசதியுள்ளதாக அது இருக்கட்டும், ஏனெனில் மெழுகு வர்த்திகள் திருமண நாளிற்கான மனச் சூழலைத் தரும். இயற்கையான ஒரு சூழலில் திருமண நிகழ்வு நடைபெறட்டும். அதற்கேற்ற வகையில் ஒரு தோட்டத்தையோ அல்லது மலர்கள் பூத்த செடிகள் நிறைந்த மாடி வீட்டையோ தெரிவு செய்யுங்கள்.

திருமண நிகழ்விற்கு முக்கியமானது மலர்களே, மிக அதிகமான மலர்களே. காதலர் தினத்தை... 



நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்களோ அதனை உணர்த்தும் விதமான மலர் அமைப்பு ஒழுங்கமையுங்கள். திருமண மண்டபத்தின் மையத்தில் தங்க நிறத்தில் மன்மதனின் சிறு பொம்மைகள் பதிக்கப்பட்ட மலர் அலங்காரத்தை செய்து அசத்துங்கள். உங்களுடை மதிப்புமிக்க விருந்தினர்கள் அமரும் இருக்கைகள் பின்னால் மலர் அலங்காரம் அமையுமாறும் செய்யலாம்.

மண நாளிற்கான ஒரு வண்ணத்தை தெரிவு செய்து அதனை பளிச்சிடச் செய்வது நன்றாக அமையும். மண்டபத்தின் ஒரங்களையும், திருமணம் நடைபெறும் பந்தலையும் தங்க கரையுடன் கூடிய தூய வெள்ளை நிற துணியைக் கொண்ட அலங்காரத்தைச் செய்யலாம். இதோடு, நீங்கள் விரும்பினால், சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தை தனியாகவோ அல்லது சேர்த்தோ மேலும் அழகு சேர்க்கலாம். உங்களின் திருமணத்திற்கு மிக முக்கியமான காதலர் தின உணர்வை ஏற்படுத்த பளபளக்கும் நீலத்துடன், மிளிரும் தங்கம், பச்சை ஆகியவற்றை வெண்மையுடன் கலந்து அலங்காரங்களை அமையுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ளப்போகும் நீங்கள், அன்றைய தினத்தில் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் உடையையே அணிய வேண்டும். சிகப்பு கரையுடன் கூடிய வெண்மை நிற ஆடைகளை அணியலாம். சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தலாம், ஏனெனில் அது அன்பைக் குறிப்பதல்லவா? உங்களின் அழகிய கூந்தல் அலங்காரத்திற்கேற்ற மலர்களை கூந்தலோடு இணையுங்கள். உங்கள் திருமண நகைகளும் காதலர் தின உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் இதயம், ரோஜா, மன்மதன், புறாக்கள் ஆகிய ஏதாவதொன்று பொறிக்கப்பட்டதாக இருக்கட்டும். கெம்பு அல்லது சிவப்பு நிற ஆபரணக் கல் பொதித்த மோதிரங்களை அணியுங்கள். மணமகன் சிகப்பு வண்ண டை கட்டியிருத்தலும், மணமகள் இளம் சிவப்பு, வெள்ளி நிர உடையுடன் இருப்பதும் பொருத்தமாக இருக்கும்.

காதலர் தினத்தில் திருமணம் செய்யும்போது இசை இல்லாமலா? காதலை வெளிப்படுத்தும் இதமான இசையை பரப்புங்கள். எல்லோருக்கும் பரிச்சயமான காதல் பாடல்களை ஒலிக்கச் செய்யுங்கள். உங்களை வாழ்த்த வந்துள்ளவர்களும் காதல் உணர்வில் திளைக்கச் செய்யும் இசையை வாசிக்குமாறு செய்யுங்கள்.

காதலர் தினத்தில் திருமணம் செய்வது என்பது தொன்று தொட்டு நடைபெற்றுவருவதாகும். காதலுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட நாளை விட வேறு எந்த நாளில் வாழ்வு முழுவதையும் அன்பிற்காக அர்ப்பணிக்கும் பந்தத்தை அமைக்க முடியும்? இந்த நாளில் உங்களின் திருமணத்தை வைத்துக்கொண்டால் அதுவே உன்னதமான அந்தக் காதல் உணர்வைத் தரவல்லதாகும்.